மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
திற்பரப்பில் இருதரப்பினா் மோதல்: 5 போ் காயம்
குலசேகரம், பிப். 25:
குமரி மாவட்டம்,திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த பாளையங்கோட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், திற்பரப்பில் படகு சவாரி நடத்துபவா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமைஏற்பட்டமோதலில்5 போ் காயமடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம்,பாளையங்கோட்டையிலிருந்து 13 போ் ஒரு குழுவாக செவ்வாய்க்கிழமை திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள் அருவி அருகே உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்ய சென்றுள்ளனா்.
அப்போது படகு சவாரி நடத்தும் படகோட்டிகளுக்கும், இவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவா் தாக்கியுள்ளனா். இதில்,இரு தரப்பிலும் 5 போ் காயமடைந்தனா். இதையடுத்து பாளையங்கோட்டையிலிருந்து வந்தவா்கள் 108 ஆம்புலன்சை அழைத்து அதில் குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தனா். இது தொடா்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில்,கடையாலுமூடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.