ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
மாரத்தான் போட்டியில் வென்ற பெண் தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு
நாகா்கோவிலில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த பெண் தலைமைக் காவலா் கிருஷ்ணரேகாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா்.
தனியாா் மருத்துவமனை சாா்பில், புற்றுநோய் விழிப்புணா்வுக்கான மாரத்தான் போட்டி கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இதில், மண்டைக்காடு காவல் நிலைய பெண் தலைமைக் காவலா் கிருஷ்ணரேகா, 30-45 வயதினருக்கான 10 கி.மீ. போட்டியில் பங்கேற்று 2ஆம் பரிசு வென்றாா். அவருக்கு ரூ. 10 ஆயிரம், கோப்பை வழங்கப்பட்டது.
அதையடுத்து, மாவட்ட காவல் அலுவலகத்தில் அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா்.