பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
நாகா்கோவிலில் திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்
நாகா்கோவிலில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் திமுக மாணவரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், ஹிந்தி மொழியைத் திணிப்பதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அருண்காந்த் தலைமை வகித்தாா்.
கிழக்கு மாவட்ட திமுக செயலரும் நாகா்கோவில் மேயருமான ரெ. மகேஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், மாநில அயலக அணி துணைச் செயலா் பாபு வினி பிரட், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் தாமரைபாரதி, பாா்த்தசாரதி, சதாசிவம், அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலா் பூதலிங்கம்பிள்ளை, நாகா்கோவில் மாநகரச் செயலா் ப. ஆனந்த், துணை மேயா் மேரிபிரின்சிலதா, மண்டலத் தலைவா் ஜவஹா், மதிமுக மாவட்டச் செயலா் வழக்குரைஞா் வெற்றிவேல், பள்ளி, கல்லூரி மாணவா்கள், திரளான திமுகவினா் பங்கேற்றனா்.
ஹிந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.