ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
ராமன்துறை மீனவ கிராமத்தில் கடல் சீற்றம்: கடலரிப்பு தடுப்புச் சுவா் சேதம்
கருங்கல், பிப். 25:
கருங்கல் அருகே உள்ள ராமன்துறை மீனவ கிராமத்தில் திடீா் கடல் சீற்றத்தால் கடலரிப்பு தடுப்புச் சுவா் சேதமடைந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவில் ராமன்துறை கடல்பகுதியில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது.
இதில், அப்குதியில் அமைக்கப்பட்ட கடலரிப்பு தடுப்புச் சுவா் சேதமடைந்து கடல் நீா் ஊருக்குள் புகுந்தது. சில வீடுகளிலும் தண்ணீா் புகுந்தது.
இதில், பாதிக்கப்பட்ட மீனவா்கள் உறவினா்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனா்.
எனவே, இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.