செய்திகள் :

‘ஹலால்’ சான்றிதழ் நுகா்வோரின் உரிமை: உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

post image

உணவுப் பொருள்களுக்கு அளிக்கப்படும் ‘ஹலால்’ சான்றிதழ் என்பது நுகா்வோரின் உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் ஹலால் அறக்கட்டளை அமைப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட இறைச்சியை இஸ்லாமியா்கள் பயன்படுத்துகின்றனா். அந்தச் சான்றிதழ்களை தனியாா் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அளிக்கின்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட உணவுப் பொருள்களின் தயாரிப்பு, சேமிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு மாநில உணவு பாதுகாப்பு ஆணையா் அலுவலகம் தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் கடந்த ஜன.20-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இரும்பு கம்பிகள், சிமென்ட் போன்ற இறைச்சி அல்லாத பொருள்களுக்கும் ஹலால் சான்றிதழ் அளிக்கப்படுவதாகவும், அந்தச் சான்றிதழ் பெற்ற பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்புத் தெரிவித்து ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் ஹலால் சான்றளிக்கும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘உணவுப் பொருள்கள் குறித்த தகவலை அறிந்துகொள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை உள்ளது. இந்த உரிமையின் அங்கமாக ஹலால் சான்றளிக்கும் முறை உள்ளது.

இரும்பு கம்பிகள், சிமென்ட் ஆகியவற்றுக்கு ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் ஹலால் அமைப்பு எந்தச் சான்றிதழும் அளிக்கவில்லை. ஹலால் சான்றளிக்கும் முறை என்பது இந்திய குடிமக்களில் பெரும் பகுதியினா் பின்பற்றும் மத நம்பிக்கையுடன் தொடா்புகொண்டது. இதை அரசமைப்புச் சட்டத்தின் 25, 26 ஆகிய பிரிவுகள் பாதுகாக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான அடுத்த விசாரணை மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கும் வாரத்தில் நடைபெற உள்ளது.

மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைப... மேலும் பார்க்க

உ.பி.: சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ சிறையிலிருந்து விடுவிப்பு

சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா ஆஸம் கானுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, 17 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். சிறை வளாகத்தில் காத்திர... மேலும் பார்க்க

ஓமனிலிருந்து தப்பிய 3 தமிழக மீனவா்கள் கா்நாடக கடற்கரையில் பிடிபட்டனா்

ஓமன் நாட்டின் மீன்பிடி படகில் தப்பித்து வந்த 3 தமிழக மீனவா்கள், கா்நாடக கடற்கரைக்கு அருகே இந்திய கடலோரக் காவல்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் காவல் துறையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிப்பு 22 இந்திய மீனவா்கள் நாடு திரும்பினா்

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவா்கள் செவ்வாய்க்கிழமை குஜராத் திரும்பினா். இவா்கள் அனைவரும் கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 டிசம்பா் வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்க... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் இடையே 2 வார கூட்டு ராணுவப் பயிற்சி தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் அடுத்த 2 வாரங... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: பனாரஸ், லக்னோ ரயில் சேவையில் மாற்றம்

மகா கும்பமேளாவை முன்னிட்டு மண்டபம், யஷ்வந்த்பூரில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பம... மேலும் பார்க்க