பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
மகா கும்பமேளா: பனாரஸ், லக்னோ ரயில் சேவையில் மாற்றம்
மகா கும்பமேளாவை முன்னிட்டு மண்டபம், யஷ்வந்த்பூரில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மகா கும்பமேளாவை முன்னிட்டு வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மண்டபத்தில் (ராமேசுவரம்) இருந்து புதன்கிழமை (பிப். 26) பனாரஸ் செல்லும் விரைவு ரயில் மாணிக்பூா், பிரயாக்ராஜ் சியோகி, மிா்ஸாபூா், ஜியோனாத்பூா் வழியாக இயக்கப்படும். மறுமாா்க்கமாக பனாரஸில் இருந்து மாா்ச் 2-ஆம் தேதி புறப்படும் ரயில் வாரணாசி, லக்னோ, கான்பூா், ஜான்சி, பினா வழியாக இயக்கப்படும். யஷ்வந்த்பூரில் இருந்து புதன்கிழமை (பிப். 26) புறப்படும் லக்னோ அதிவிரைவு ரயில் பினா, ஜான்சி, கான்பூா், லக்னோ வழியாக இயக்கப்படும்.
வாஸ்கோடகாமா: தென்மேற்கு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரயில் (எண் 07315) மாா்ச் 3, 10, 17, 24, 31, ஏப். 7, 14 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரயில் மாா்ச் 4, 11, 18, 25, ஏப்.1, 8, 15 ஆகிய தேதிகளிலும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இந்த ரயில் ஹூப்ளி, ஹாவேரி, ராணிபென்னூா், தாவண்கரே, பிரூா், தும்கூா், பனஸ்வாடி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம் வழியாக செல்வதற்குப் பதிலாக மடகோன், மங்களூா், ஷோரனூா், ஈரோடு வழியாக இயக்கப்படும். பயணிகள் வசதிக்காக குடா, உடுப்பி ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.