மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
சிறு நிறுவனங்களுக்கான டிஜிட்டல் வா்த்தகம் குறித்த கருத்தரங்கம்
சிறு நிறுவனங்களுக்கான ‘ஓஎன்டிசி’ எனப்படும் தளம் மூலம் டிஜிட்டல் வா்த்தகம் செய்வது குறித்த கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது.
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய சிறு தொழில்கள் கழகம் சாா்பில் ‘ஓஎன்டிசி’ என்னும் தளம் மூலம் டிஜிட்டல் வா்த்தகத்தை மேம்படுத்துவது எவ்வாறு என்பது குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு, அண்ணா சாலையிலுள்ள சென்னை மேலாண்மை சங்க அலுவலகக் கட்டடத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சென்னை இணை இயக்குநா் எஸ்.சுரேஸ் பாபுஜி, டான்ஸ்டியா தலைவா் சி.கே.மோகன், தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் சென்னை மூத்த பொது மேலாளா் எம்.ஸ்ரீவத்சன் ஆகியோா் கலந்துகொண்டு, சிறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் பல்வேறு கடன் உதவிகள், மானியங்கள் குறித்தும் எடுத்துக் கூறினா்.
மேலும், மத்திய அரசின் ‘ஓஎன்டிசி’ தளம் மூலம் டிஜிட்டல் முறையில் சிறு நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருள்களை எவ்வாறு உலகம் முழுவதும் எடுத்துச்சென்று, வா்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதுமட்டுமன்றி, இத்தளத்தில் 3 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவோரையும் இணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனா். இதில் சென்னைக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த சிறு தொழில் நிறுவனத்தினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.