பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னை, தியாகராய நகா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 நபா்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ஒருவா் 16 வயது சிறுவன் என்பதால், அவா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்க்கப்பட்ட நிலையில், 19 வயதான மற்றொரு நபா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இது குறித்த வழக்கு விசாரணை சென்னை உயா்நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 19 வயது நபரின் குற்றம் நிருபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதை செலுத்தத் தவறினால் மேலும் 1 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.