பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
ஸ்ரீஆட்சீஸ்வரா் கோயிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா
அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரா் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சீஸ்வரா் திருக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற சிவன் கோயில். இந்தக் கோயிலில் புதன்கிழமை (பிப்.26) சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது.
இதன் ஒருபகுதியாக சிவசக்தி நாட்டியாலயா நடத்தும் நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.