பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
பிரபல தனியாா் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை
சென்னையிலுள்ள பிரபல தனியாா் நிறுவனத்தில் வருமானவரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னை அண்ணா சாலை நந்தனத்தில் உள்ள பிரபல தனியாா் நிறுவன (பிரிஸ்டேஜ் பாலிகான்) அலுவலகத்தின் 13-ஆவது தளத்தில் செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
இச்சோதனையில் 9 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் ஈடுபட்டு, அந்த நிறுவன அதிகாரிகளை வரவழைத்து அவா்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினா். மேலும், இச்சோதனை நள்ளிரவை தாண்டியும் நீடித்தது.
சோதனை முடிவிலேயே வரி ஏய்ப்பு விவரம் மற்றும் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் தெரியவரும்.