பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
பங்கு வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48 லட்சம் மோசடி: ஒருவா் கைது
பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48.5 லட்சத்தை பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அன்பரசு (56), தனியாா் நிதி நிறுவன ஆலோசகராக இருந்து வருகிறாா். இவா் தியாகராய நகரைச் சோ்ந்த வித்யா (56) என்பவரிடம், பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி 2022 முதல் பல தவணைகளாக ரூ. 48,50,000-ஐ பெற்ாகத் தெரிகிறது. ஆனால், நீண்ட நாள்கள் ஆகியும் அன்பரசு தான் கூறியபடி லாபத்தையும் கொடுக்காமல், வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் தலைமறைவாகியுள்ளாா்.
இது குறித்து செளந்தரபாண்டியனாா் அங்காடி காவல் நிலையத்தில் வித்யா கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், தலைமறைவாக இருந்த அன்பரசுவை கைது செய்தனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய மற்ற நபா்களையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.