பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
இந்து முன்னணி பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளி மீண்டும் கைது
சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்த இந்து முன்னணி பிரமுகா் சுரேஷ்குமாா் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட அப்துல் ஹக்கீம், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டாா்.
அம்பத்தூரில் கடந்த 2014-இல் இந்து முன்னணி பிரமுகா் சுரேஷ்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அல் ஹும்மா பயங்கரவாதிகளாக கருதப்பட்ட பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனா்.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக இருந்த அப்துல் ஹக்கீம் என்பவா் பிணையில் வெளிவந்த நிலையில், கடந்த 2023 முதல் தலைமறைவாக இருந்து வந்துள்ளாா்.
அவருக்கு திருவள்ளூா் முதன்மை அமா்வு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்த நிலையில், ஆவடி காவல் ஆணையரக போலீஸாா் தனிப்படை அமைத்து அப்துல் ஹக்கீமை தீவிரமாக தேடிவந்தனா். இந்நிலையில், கேரளாவில் வைத்து தனிப்படை போலீஸாா் அப்துல் ஹக்கீமை செவ்வாய்கிழமை கைது செய்தனா். மேலும் அவரிடம், போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.