கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
குட் பேட் அக்லி டீசர் புரோமோ!
நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.
அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.
குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் பட வெளியீட்டை குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது.
ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இந்தப் படத்தில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளமால் சாதாரண கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார்.
விடாமுயற்சி நல்ல படமாக அமைந்தாலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதனால் குட்பேட் அக்லி மீது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி வருகிற ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் முன்னரே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் டீசர் பிப். 28ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Maamey...it's time for VERA LEVEL ENTERTAINMENT #GoodBadUglyTeaser on February 28th ❤#GoodBadUgly grand release on 10th April pic.twitter.com/bEw6FOqiD7
— T-Series South (@tseriessouth) February 25, 2025