`இருவர்' முதல் `ஜோதா அக்பர் வரை' - அகாடமி அருங்காட்சியகத்தில் 12 இந்திய திரைப்படங்கள் திரையிடல்
அகாடமி அருங்காட்சியகம் 12 இந்தியத் திரைப்படங்களை திரையிடவிருக்கிறது.
இது போன்ற திரைப்படங்களை அகாடமி அருங்காட்சியகம் திரையிடுவது வழக்கம்தான். ஆனால், இந்திய சினிமா வரலாற்றில் 12 இந்தியப் படங்கள் திரையிடப்படுவது இதுவே முதல் முறை.
லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் இந்த அகாடமி அருங்காட்சியகம் `Emotion in color: A Kaleidoscope of Indian Cinema' என்ற பிரிவின் கீழ் இந்த 12 இந்தியப் படங்களைத் திரையிடவிருக்கிறது. இந்த திரையிடல் மார்ச் 7-ம் தேதி முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை நடைபெறும். பல வகையான இந்தியத் திரைப்படங்களும் இந்தத் திரையிடல் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

திரையிடல் பட்டியல்:
மார்ச் 7 - 1987-ல் வெளியான `மதர் இந்தியா'
மார்ச் 10 - 1976-ல் வெளியான `மந்தன்'
அதே மார்ச் 10-ம் தேதி - 1977-ல் வெளியான `அமர் அக்பர் அந்தோணி'
மார்ச் 11 - 1990-ல் வெளியான `இஷனோ' என்ற மனிப்பூரி திரைப்படம் திரையிடப்படுகிறது.
மார்ச் 14 - 1979-ல் வெளியான `குமட்டி' என்ற மலையாள திரைப்படம் திரையிடப்படுகிறது.
மார்ச் 18 - 1987-ல் வெளியான `மிர்ச்சி மசாலா' என்ற இந்தித் திரைப்படம் திரையிடப்படுகிறது.
மார்ச் 20 - 1995-ம் ஆண்டு வெளியான `தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' என்ற இந்தி திரைப்படம் திரையிடப்படுகிறது.
மார்ச் 22 - 2002-ம் ஆண்டு வெளியான `தேவ்தாஸ்' என்ற இந்தித் திரைப்படம் திரையிடப்படுகிறது.
மார்ச் 31- 2008-ல் வெளியான `ஜோதா அக்பர்' இந்தி மொழி திரையிடப்படுகிறது.
ஏப்ரல் 5 - 1962-ம் ஆண்டு வெளியான இயக்குநர் சத்யஜித் ரேவின் `கஞ்செஞ்சுங்கா' என்ற வங்க மொழித் திரைப்படம் திரையிடப்படுகிறது.
ஏப்ரல் 8 - 1972-ம் ஆண்டு வெளியான `மாய தர்பன்' என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.
இறுதி நாளான ஏப்ரல் 19-ம் தேதி மணி ரத்னத்தின் `இருவர் ' திரைப்படம் திரையிடப்படுகிறது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே தமிழ் திரைப்படம் `இருவர்' திரைப்படம் மட்டும்தான்.