கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!
50 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஹிட் அடித்த `ஷோலே’; வைரலாகும் டிக்கெட்... விலை எவ்வளவு தெரியுமா?
50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படத்தின் டிக்கெட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
1975 ஆம் ஆண்டு பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த ’ஷோலே’ படத்தினுடைய டிக்கெட்டின் புகைப்படம் தான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்கெட்டின் விலை காரணமாக தான் இணையத்தில் இது அதிகம் பகிரப்பட்ட வருகிறது.
வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ஹிட்டடித்த படம் ஷோலே. இந்த படத்தில் அமிதாப் பஜன், சஞ்சீவ் குமார், ஹேமா மாலினி என பலர் நடித்திருந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/onlo4kdw/hero-image-24.jpg)
'ஷோலே’ படம் வெளியான போது தியேட்டர் காலியாக இருந்துள்ளது, படத்தின் பாடல் பிரபலமானதையடுத்து மூன்று நாள்களில் தியேட்டர்களில் கூட்டம் கூடியிருக்கிறது. அந்த காலத்தில் ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.30 கோடியை நெருங்கி சாதனை படைத்திருக்கிறது.
இந்த படத்தின் டிக்கெட் தான் தற்போது வைரலாகி வருகிறது. இதில் இருக்கும் விலை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
படத்தின் தரை டிக்கெட் 1.50 ரூபாய், பென்ஞ் டிக்கெட் 2 ரூபாய், பால்கனி டிக்கெட் 3 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த காசுக்கு தியேட்டர் வாசலில் டீ கூட வாங்க முடியாது என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.