செய்திகள் :

``இந்திய பாஸ்போர்ட்டை பார்த்தும் நம்பவே இல்லை..." - அமெரிக்காவில் கைதானது குறித்து `கத்தி' வில்லன்

post image

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் கத்தி. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், அமெரிக்கா விமான நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டது தொடர்பான தகவலைப் பகிர்ந்து கொண்டார். ``நான் அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு படம் நடிப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போது நியூயார்க் விமான நிலையத்தில் என்னைத் தடுத்துவிட்டார்கள். நீ யார்? எங்கிருந்து வருகிறாய் என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார்கள். நான் என் இந்திய பாஸ்போர்ட்டைக் காண்பித்தேன். அப்போதும் அவர்கள் அதை நம்பவே இல்லை.

நீல் நிதின் முகேஷ்

என்னைக் கேள்விக்கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால், நான் பதிலளிக்க அனுமதிக்கப்படவே இல்லை. கிட்டத்தட்ட 4 மணி நேரம் என்னைக் கைது செய்து விசாரித்தார்கள். ஒருகட்டத்தில் என்னைக் குறித்து கூகுளில் தேடும்படிக் கேட்டுக்கொண்டேன். அப்போதுதான் அவர்கள் தங்கள் தவறை உணரத் தொடங்கினார்கள். அதன்பிறகு என் அப்பா, என் தாத்தா குறித்தெல்லாம் கேட்டுவிட்டு அதை உறுதி செய்த பிறகுதான் விடுவித்தார்கள்." என்றார்.

நடிகர் நீல் நிதின் முகேஷின் குடும்பம் இசைக் கலைஞர்கள் பின்னணியைக் கொண்டது. இவரின் தாத்தா பாலிவுட்டின் பிரபலமான பின்னணி பாடகர். இவரின் தந்தையும் பின்னணிப் பாடகராகவே அறியப்பட்டார். நீல் நிதின் முகேஷ்தான் தற்போது நடிப்புத் துறையில் ஈடுபட்டுவருகிறார்.

Ajithkumar: "விசில் அடித்துக் கொண்டாட நான் ஓடோடி வருவேன் அண்ணா"- நெகிழ்ந்த விவேக் ஓபராய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' என இரண்டு படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது.இதனிடையே சமீபத்தில் துபாயில் நடந்த கார்ரேஸில் கலந்துக... மேலும் பார்க்க

Udit Narayanan: `அது அசிங்கமான ஒன்று அல்ல!' - சர்ச்சைக்கு உதித் நாராயணன் சொல்லும் பதில் என்ன?

முன்னணி பாடகர் உதித் நாராயணன் குறித்தான பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது.சமீபத்தில், உதித் நாராயணனின் கான்சர்ட்டில் பாடிக் கொண்டிருக்கும்போது மேடையை நோக்கி அவரின் பெண் ரசிகர்கள் ... மேலும் பார்க்க

Shah Rukh Khan: "உங்களுடன் போட்டிப்போடுவது கடினம்..." - தென்னிந்திய நடிகர்கள் குறித்து ஷாருக்கான்

துபாயில் நடந்த குளோபல் வில்லேஜ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். அது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், "எனக்குத் தென்னிந்தியாவில் நிறை... மேலும் பார்க்க

``சல்மான் கானை திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால்..'' -ரசிகரின் வேண்டுதல், அமீஷா பட்டேல் பதில்!

பாலிவுட்டில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நடிகராக இருப்பது சல்மான் கான் மட்டுமே. நடிகைகளில் அமீஷா பட்டேல், தபு, கங்கனா ரனாவத் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நடிகர்களில் சல்மான் கான் போன்ற ஒ... மேலும் பார்க்க

SRK: இடித்துக் கட்டப்படவுள்ள ஷாருக்கான் வீடு; போட்டிப் போடும் பில்டர்கள்; காரணம் என்ன?

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை பாந்த்ராவில் மன்னத் என்ற பங்களா இருக்கிறது. இப்பங்களாவில்தான் அவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். கடற்கரை அருகில் இருக்கும் இப்பங்களாவைக் காண தினமும் நூற்ற... மேலும் பார்க்க

SRK: நிலத்தை மதிப்பீடு செய்ததில் தவறா? அரசிடம் பணத்தைத் திரும்பக் கேட்கும் ஷாருக்; என்ன நடந்தது?

நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை பாந்த்ரா கடற்கரை அருகில் மன்னத் என்ற பங்களா இருக்கிறது. இப்பங்களாவின் தற்போதைய மதிப்பு ரூ.200 கோடியாகும். ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கெளரி கான் பெயரிலுள்ள இப்பங்களா இர... மேலும் பார்க்க