America: ``ட்ரம்பா - எலான் மஸ்கா" அமெரிக்காவின் அதிபர் யார்? - விமர்சனங்களும் பி...
Asset Allocation: செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா.. முதலீட்டு உத்திகளை அறிய திருப்பூர் வாங்க..!
செல்வம் சேர்க்க அதனை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அதனை அஸெட் அலோகேஷன் (Asset Allocation) என்பார்கள்.
பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகள்), கடன் சந்தை சார்ந்த முதலீடுகள் (ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள்), தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவை நான்கு முக்கிய சொத்து பிரிவுகளாகும். இவற்றில் சரியாக எப்படி பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என தெரிந்தால் ஒருவர் சுலபமாக செல்வம் சேர்க்க முடியும்.
நாணயம் விகடன் மற்றும் இன்டிக்ரேட்டெட் இணைந்து நடத்தும் 'செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா- அஸெட் அலோகேஷன்! சிறப்பு நிகழ்ச்சி, திருப்பூரில் பிப்ரவரி 9-ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.
காலை 10.30 am முதல் 12.30 pm வரை இரண்டு மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நிதி நிபுணர் சோம வள்ளியப்பன் சிறப்புரையாற்றுகிறார்.
பதிவு செய்ய Click Here
இந்த நிகழ்ச்சியில் எப்படி சரியாக முதலீடு செய்ய வேண்டும், எந்தெந்த சொத்து பிரிவுகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்கிற விவரத்தை முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கெனவே முதலீடு செய்து வருபவர்கள், புதிதாக முதலீடு செய்ய இருப்பவர்கள் அவர்களின் சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.
எங்கே , எப்போது..?
பதிவு செய்ய Click Here