செய்திகள் :

Vehicle: பழைய வண்டி; எக்சேஞ்ச், விற்பனை எப்படி செய்தால் லாபம்... ஷோரூமா, டீலரா எது பெஸ்ட்?

post image

'வாகனம்' - ஒரு காலத்தில் மக்களின் கனவாக இருந்தது. இப்போது, அது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. 'ஏற்கெனவே வண்டி இருக்கு. ஆனா, இப்போ புது வண்டி வாங்கணும். எக்சேஞ்ச் போட்டுக்கலாம்' என்று நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஷோரூமில் எக்சேஞ்ச் பண்ணலாமா அல்லது டீலரிடம் எக்சேஞ்ச் பண்ணலாமா என்ற குழப்பம் இருக்கும். அவர்களுக்கான கட்டுரை இதோ...

ஆட்டோமொபைல் பத்திரிகையாளர் T.முரளி

'டீலரா...ஷோரூமா' என்கிற கேள்விக்கு பதில் தருகிறார் ஆட்டோமொபைல் பத்திரிகையாளர் T.முரளி...

``ஒரு வண்டியை ஷோ ரூமில் கொடுப்பதாக இருந்தாலும், பழைய வாகன டீலர்களிடம் விற்பதாக இருந்தாலும் இரண்டுக்கும் நன்மைகள், தீமைகள் உண்டு.

குறிப்பிட்ட அளவு லாபத்தை மார்ஜினாக வைத்துக்கொண்டுதான் ஷோ ரூம்களில் பழைய வண்டிகளை எக்ஸ்சேஞ்சுக்கு எடுப்பார்கள். அதனால் அதில் நமக்குக் கிடைக்கும் லாபம் குறைவாகத்தான் இருக்கும்.

ஏஜென்டுகள் மூலம்...

பொதுவாக, ஷோ ரூம்களில் நம்மிடம் இருந்து வாங்கும் வண்டிகளை ஏஜென்டுகள் மூலம் விற்பார்கள். ஏஜென்டுகளுக்கும் கமிஷன் கொடுத்து, தங்களுக்கும் லாபம் வேண்டும் என்பதால், குறைந்த தொகைக்குதான் பழைய வண்டிகளை நம்மிடம் இருந்து வாங்குவார்கள்.

ஆனால், நாம் புதியதாக வாங்கும் வண்டிகளின் ஆக்சரிசஸ் களுக்கு நல்ல தள்ளுபடி கொடுப்பார்கள் என்பது கூடுதல் ப்ளஸ்.

இன்னொரு பக்கம், பழைய வண்டி டீலர்களுக்கு பெரிய நெட்வொர்க் உள்ளதால், அவர்களிடம் வண்டியை விற்கும்போது நல்ல லாபம் பார்க்கலாம். அதனால் வண்டிகளை எக்ஸ்சேஞ்ச் முறையில் மாற்றிக்கொள்வதைவிட இவர்களிடம் விற்பது லாபம்.

பழைய வண்டி விற்கும்போது இந்த சிக்கலை கவனியுங்க!

சிக்கல் உள்ளது - தெரியுமா?

பழைய வண்டிகளை விற்பதில் கவனிக்க வேண்டிய சிக்கல் ஒன்று உள்ளது. ஒரு பழைய வண்டியை எக்ஸ்சேஞ்சில் மாற்றும்போது அல்லது விற்கும்போது நம் பெயரில்தான் வண்டியின் ஆவணங்கள் இருக்கும். அவற்றை மாற்ற சிறிது காலம் பிடிக்கும்.

ஒருவேளை, நமது பழைய வண்டியை வாங்குபவர் தவறானவராக இருந்தால், அவர் ஏதாவது தவறு செய்தால், அதில் நாம் வசமாக மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது. ஷோ ரூமில் பழைய வண்டியைத் தந்து புதிய வண்டியை எக்ஸ்சேஞ்ச் முறையில் பெறும்போது இந்த சிக்கல் குறைவு.

ஒரு வண்டியை விற்கும்போது ஷோ ரூம்களில் எவ்வளவு ரூபாய்க்கு எடுக்கிறார்கள், பழைய வண்டி டீலர்கள் எவ்வளவு ரூபாய் தருவார்கள் என்பதை நன்கு விசாரித்து, `எது லாபம்?' என்பதைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது தெரிந்து கொள்வதன் மூலம் எங்கு வண்டியை விற்கிறோமோ, அங்கே நல்ல பேரம் பேசி லாபம் பார்க்க முடியும்.

ஷோ ரூம், பழைய கார் டீலர் - எது லாபம்?

1,50,000 ரூபாய்...

உதாரணமாக, சமீபத்தில் நண்பர் ஒருவர் பழைய கார் ஒன்றை விற்றார். ஷோ ரூமில் எக்ஸ்சேஞ்ச் விலை கேட்டபோது ரூ.1,45,000 என்று சொன்னார்கள். ஆனால், டீலர்கள் ரூ.1,55,000 தருவதாக சொன்னார்கள். இதை சொல்லி பேரம் பேசி நண்பர், ஷோ ரூமில் ரூ.1,50,000-க்குப் பழைய வண்டியை எக்ஸ்சேஞ்ச் செய்தார்'' என்று கூறி முடிக்கிறார்.

வாகனங்கள் சார்ந்த நிபுணர் ஒருவரிடம் இது பற்றிப் பேசியபோது, ``பைக் மற்றும் கார்களை நல்ல விலைக்கு விற்க Olx மாதிரியான விற்பனை ஆப்கள் நல்ல ஆப்ஷன். ஷோ ரூம், பழைய வாகன விற்பனை நிலையம் தருவதைவிட, இந்த ஆப்களில் நல்ல விலை பார்க்கலாம். ஆனால், ஆப்கள் மூலம் வாகனங்களை விற்பதற்கு முன், ஆவணங்களில் இருக்கும் நமது பெயரை மாற்ற வேண்டியது மிக மிக அவசியம்.

கார் விற்பனை

பெஸ்ட் சாய்ஸ்!

ஒருவேளை, பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க வேண்டுமெனில், ஷோ ரூம் எக்ஸ்சேஞ்ச் பெஸ்ட் சாய்ஸ். ஷோ ரூமில் வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் முறையில் மாற்றும்போது புதிய வாகனத்துக்கு இன்ஷூரன்ஸ் முதல் ஆக்சரிசஸ் வரை நல்ல தள்ளுபடி விலை கிடைக்கும்.

பழைய வாகனங்களை விற்க மட்டும் செய்கிறோம் என்றாலும், அலைச்சல் எதுவும் வேண்டாம். என்றாலும் பழைய வாகன விற்பனை நிலையத்தை அணுகலாம். அதாவது, ஆப்களில் வாகனங்களை விற்கும்போது வண்டியை கஸ்டமர்களிடம் காட்டுவது தொடங்கி ஆவணங்களில் பெயர் மாற்றுவது வரை நாமேதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், விற்பனை நிலையங்களை அணுகும்போது அனைத்தையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்பது ப்ளஸ். ஆனால், ஆப்களில் கிடைக்கும் அளவுக்கு லாபம் கிடைக்காது என்பது மைனஸ்" என்று கூறினார்.

ஆக, பழைய வண்டியை எந்த முறையில் விற்றால் லாபம் என்பது புரிந்ததா?

பிராட் பிட்டுடன் டேட்டிங்; ரூ.7 கோடி அவுட்; AI பயன்படுத்தி மோசடி!

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் 'டேட்டிங்' செய்வதாக நம்பி 7 கோடி ரூபாயை இழந்திருக்கிறார், ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த 53 வயதான இன்டீரியர் டிசைனர் ஆன் (Anne). 2023 பிப்ரவரி மாதம், அழகான பள்ளத்தாக்கு புகை... மேலும் பார்க்க

Jumped Deposit Scam: '5,000 ரூபாய் வரும்... அப்புறம் மொத்தமா போயிடும்!' - UPI ஆப் மூலம் புதிய மோசடி

மோசடிகளில் தற்போது அறிமுகமாகி உள்ள லேட்டஸ்ட் டிரெண்ட் 'Jumped Deposit Scam'. ஸ்மார்ட் போன்கள், அன்லிமிடெட் டேட்டாக்கள் என்ற வசதிகள் எப்போது அறிமுகமானதோ, அன்றிலிருந்து தினுசு தினுசாக புதுசு புதுசாக தின... மேலும் பார்க்க

பங்கு முதலீட்டில் லாபம் ஈட்ட உதவும் டெக்னிக்கல் அனாலிசிஸ்; எப்படி பயன்படுத்துவது? முழுமையான பயிற்சி

பங்குச் சந்தை சமீப காலங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. காரணம், சந்தையில் இப்போதைக்கு அரசு அங்கீகரித்துள்ள முதலீடுகளில் பங்குச் சந்தைதான் அதிக லாபம் கொடுப்பதாக இருக்கிறது.ஆனால், பங்குச் ச... மேலும் பார்க்க