Gambhir: ``எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் ஆடவேண்டும்; இலையென்றால்..." - BGT தோல்வி...
Jumped Deposit Scam: '5,000 ரூபாய் வரும்... அப்புறம் மொத்தமா போயிடும்!' - UPI ஆப் மூலம் புதிய மோசடி
மோசடிகளில் தற்போது அறிமுகமாகி உள்ள லேட்டஸ்ட் டிரெண்ட் 'Jumped Deposit Scam'. ஸ்மார்ட் போன்கள், அன்லிமிடெட் டேட்டாக்கள் என்ற வசதிகள் எப்போது அறிமுகமானதோ, அன்றிலிருந்து தினுசு தினுசாக புதுசு புதுசாக தினம் தினம் மோசடிகள் உருவாகி வருகின்றது. அதற்கு முன்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால், இந்த அளவுக்கு அதிகமாக இல்லை.
அதன்படி, இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் 'ஜம்ப்ட் டெபாசிட் மோசடி'. இந்த மோசடி குறித்து கடந்த டிசம்பர் மாதமே தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்திருந்தனர்.
ஜம்ப்ட் டெபாசிட் என்றால் என்ன?
மோசடியாளர் தன்னிடம் இருக்கும் தரவுகளை வைத்து, தான் 'யாரை மோசடி செய்யப்போகிறோம்?' என்பதை முதலில் திட்டமிடுவார்கள். அப்படி திட்டமிட்ட நபருக்கு ரூ.5,000 போன்ற சின்ன தொகையை யு.பி.ஐ ஆப்கள் மூலம் அனுப்புவார்கள். இந்தத் தொகையை பெற்ற நபர் இதுக்குறித்த குழப்பத்தில் இருக்கும்போதே, அந்த நபருக்கு யு.பி.ஐ ஆப்பில் பெரிய தொகைக்கான ரெக்வஸ்ட் வரும்.
'நமக்கு இந்தத் தொகை வரவில்லையே...' என்று பதட்டத்தில் அந்த நபர் பேங்க் பேலன்ஸை செக் செய்வார். அப்போது அவர் போடும் பின் நம்பர் இந்தப் பண ரெக்வஸ்டை ஓகே செய்துவிடும். இதனால், மோசடி நபருக்கு பெரிய தொகை சென்றுவிடும்.
இதில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?
இப்படி தெரியாத ஒரு நபரிடம் இருந்து சின்னத் தொகை, பெரியத் தொகை என எது வந்தாலும், 15 - 20 நிமிடங்களுக்கு பேங்க் பேலன்ஸை செக் செய்யாதீர்கள்.
இல்லையென்றால், அப்படி தொகை வந்த உடனே பின் நம்பர் போடுகிறீர்கள் என்றால் முதலில் வேண்டுமென்றே தவறான பின்னை பதிவிடுங்கள்.
இந்த இரண்டில் எதாவது ஒன்றை செய்யும்போது, பண ரெக்வஸ்ட் ரத்தாகி விடும்.