நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
குஜராத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து - 3 பேர் பலி
போர்பந்தரில் கடலோரக் காவல் படையின் அதிநவீன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியானார்கள்.
குஜராத் மாநிலம், போர்பந்தரில் கடலோரக் காவல் படையின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் இன்று ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டர் தீப்பற்றியது.
இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 பைலட்டுகள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணமாகி இரண்டே மாதங்கள்! பேருந்து மோதி காவல் உதவி ஆய்வாளர், கணவர் பலி!
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணமாக விபத்து நேரிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.