செய்திகள் :

தலைநகரில் குளிருக்கிடையே லேசான மழை!

post image

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை குளிா் நிலை நீடித்தது. நகரத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதே சமயம், மூடுபனி சற்று குறைந்திருந்ததால், காண்புதிறன் மேம்பட்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து கடும் குளிா் நிலவி வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. காலையில் நகரத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதற்கிடையே, ஐஎம்டி மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

தலைநகரில் நிலவிய அடா்ந்த மூடுபனி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் காலை வேளையில் காண்பு திறனை பூஜ்ஜியமாகக் குறைத்திருந்தது, இதனால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் திருப்பிடவிடப்பட்டன.வந்தன. ரயில்களும் தாமதமாகின. சனிக்கிழமை அன்று என்றும் இல்லாத வகையில் ஒன்பது மணி நேரம் காண்பு திறன் பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால், திங்கள்கிழமை காலை 5.30 மணியளவில், சஃப்தா்ஜங் மற்றும் பாலத்தில் காண்புதிறன் 300 மீட்டராக இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

திங்கள்கிழமை காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை நஜஃப்கரில் 2.5 மிமீ, பிதாம்புராவில் 2 மிமீ, பாலத்தில் 1 மிமீ மற்றும் பூசாவில் 0.5 மிமீ மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி உயா்ந்து 9.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 2 டிகிரி குறைந்து 18 டிகிரியாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவி .........சதவீதமாகவும் பதிவாகியது.

காற்றின் தரம்: காற்றின் தரம்: தலைநகரில் காலை 9 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 320 புள்ளிகளாகப் பதிவாகி, ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகள் தெரிவித்தன. இதன்படி, மந்திா்மாா்க், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், நேரு நகா், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகள் முதல் 400 புள்ளிகள் வரை பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், சாந்தினி சௌக், லோதி ரோடு, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஆயாநகா், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், குருகிராம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 பபுள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சிபிசிபி படி, டெல்லியின் காற்று தரக் குறியீடு ஏக்யூஐ காலை 9 மணிக்கு 320 மிகவும் மோசமானது ஆக இருந்தது.

தில்லி பேரவைத் தோ்தலில் பிஎஸ்பி தனித்துப் போட்டி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா். தில்லி பேரவைத் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சில மணி ... மேலும் பார்க்க

கடும் மூடுபனியால் 25 ரயில்கள் தாமதம்!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை கடும் மூடுபனி நிலவியதால் காண்பு திறன் வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாக தில்லிக்கு வரவேண்டிய ரயில்களில் 25 ரயில்கள் தாமதமாகின. தில்லியில் கடந்த வாரத் தொடக்கத... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள 150 உதவி பெறாத பள்ளிகளை முறைப்படுத்த துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

தில்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள 150 உதவி பெறாத பள்ளிகளை முறைப்படுத்த துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

தில்லியில் பிப்.8 -இல் இரட்டை என்ஜின் அரசு அமையும்: வீரேந்திர சச்தேவா நம்பிக்கை

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் பிப்ரவரி 8 ஆம் தேதி தேசிய தலைநகரில் இரட்டை என்ஜின் அரசு அமையும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்து... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகாரத்தில் பாஜக சாடல்

புது தில்லி: தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையானது, முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஃபிளாக்ஸ்டாஃப் சாலை வீடு (ஷீஷ் மஹால்) தொடா்பான 139 கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அவரது தவ... மேலும் பார்க்க

நீா் வழங்கல் முயற்சிக்கு தில்லி அரசு இடையூறு: என்டிஎம்சி துணைத் தலைவா் குற்றச்சாட்டு

நமது நிருபா்புது தில்லி: 24 மணி நேரமும் நீா் விநியோகத்தை உறுதி செய்வதற்கான புதுதில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) முயற்சிகளை தில்லி அரசு தடுப்பதாக அதன் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் குற்றம்... மேலும் பார்க்க