செய்திகள் :

ISRO Chairman: குடும்பக் கஷ்டம்; அரசுப்பள்ளியில் தமிழ்வழிப் படிப்பு - நெகிழும் இஸ்ரோ தலைவர் நாராயணன்

post image
இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தற்போதைய சேர்மனாக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவிருக்கும் நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி நாராயணன் புதிய தலைவராகப் பொறுப்பேற்கிறார். உயரிய பதவியை எட்டியிருக்கும் நாராயணன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம். 'அரசுப்பள்ளியில் தமிழ்வழியில்தான் படித்தேன்...' என தனது எளிய பின்னணியை விளக்கி நெகிழ்ச்சியாகப் பேசினார்.
Narayanan

வி.நாராயணன் பேசுகையில், ''இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. அதற்கு பிரதம மந்திரி என்னை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். 41 ஆண்டுகளாக இஸ்ரோவில் பணியாற்றி வருகிறேன். பல்வேறு திட்டங்களின் இயக்குநராக 7 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அந்த அனுபவங்களினால் எனக்கு இப்போது கிடைத்திருக்கும் இந்தப் பதவியை ஒரு மாபெரும் பொறுப்பாகத்தான் கருதுகிறேன். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற விண்வெளித் துறையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை இஸ்ரோ மூலம் செய்வேன்.

கன்னியாகுமரியின் மேலக்காட்டுவிளை எனும் சிறு கிராமத்தில் எளிய குடும்பத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். அப்பா விவசாயத்தோடு ஊருக்குள்ளேயே சிறுதொழில்கள் சிலவற்றையும் செய்து வந்தார். அரசுப்பள்ளியில் தமிழ்வழிக்கல்வியில்தான் பயின்றேன். குடும்பக் கஷ்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஆசிரியர்களின் உதவியோடும் அவர்களின் ஆசிர்வாதத்தோடும்தான் கடினமாக படித்து இந்த நிலையை எட்டியிருக்கிறேன்." என்றார்.

Narayanan

1984 லிலிருந்து இஸ்ரோவில் பணியாற்றி வரும் வி.நாராயணன் ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

அரசு தொடக்கப் பள்ளி டு கோரக்பூர் ஐஐடி இஸ்ரோ தலைவராகும் குமரி விஞ்ஞானி நாராயணன் கடந்துவந்த பாதை

இஸ்ரோ தலைவராக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த வி.நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக இருக்கும் சோம்நாத்துக்கு முன்பு தலைவராக கன்னி... மேலும் பார்க்க

ISRO: முதன்முறையாக விண்வெளியில் துளிர்த்த உயிர்; காராமணி விதைகளை முளைக்கச் செய்து சாதனை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) பூமிக்கு வெளியே காராமணி விதைகளை முளைக்க வைத்து சாதனை படைத்துள்ளது. விண்வெளி சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான சிறிய ஆய்வு தொகுதியின் (CROPS) ஒரு பகுதியாக பி.எஸ்.எல... மேலும் பார்க்க

Kenya: வானிலிருந்து விழுந்த 500 கிலோ வளையம்... அதிர்ஷ்டவசமாக தப்பிய கிராமத்தினர் - ISROதான் காரணமா?

கென்யா நாட்டின் ஒரு அமைதியான கிராமத்தில் நண்பகல் 3 மணியளவில் மிகப் பெரிய வட்ட வடிவ உலோகம் வானிலிருந்து விழுந்து உள்ளூர்மக்களைப்பயத்தில் ஆழ்த்தியிருக்கிறது.8 அடி விட்டம் கொண்ட அதன் எடை 500 கிலோவுக்கும்... மேலும் பார்க்க

PSLV C60 : விண்ணில் பாய்ந்த PSLV C60; சவாலில் வெற்றிகரமாக சாதித்த இஸ்ரோ - முழு விவரம் இங்கே!

PSLV-C60 ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, PSLV-C60 ராக்கெட் நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்டவுன் நேற்று முன்த... மேலும் பார்க்க