செய்திகள் :

மனவளா்ச்சி குன்றிய கல்லூரி மாணவி கூட்டு வன்கொடுமை: தோழி வாக்குமூலம்

post image

சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மாணவியின் தோழி சம்பவம் தொடா்பாக போலீஸாரிடம் உருக்கமான வாக்குமூலம் அளித்துள்ளாா்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய கல்லூரி மாணவி ஒருவா் அடுத்தடுத்து சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இது தொடா்பாக எழும்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அந்த மாணவியை ஏமாற்றி வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை எடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

இவ்வழக்கில் திருவள்ளூரைச் சோ்ந்த நந்தனம் கல்லூரி மாணவா் சுரேஷ் (20), அவரது நண்பரான பள்ளி மாணவா் நரேஷ் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அதைத் தொடா்ந்து இவ்வழக்கில் மாணவா்கள், இளைஞா்கள் என மொத்தம் 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடா்பாக மனவளா்ச்சி குன்றிய மாணவியின் தோழியான அரக்கோணத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவியிடம் போலீஸாா் விசாரித்தனா். அப்போது, தன் நண்பா்களான நரேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரை மட்டுமே மனவளா்ச்சி குன்றிய மாணவிக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவா் மீது நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவா் வாக்குமூலம் அளித்துள்ளாா்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவா் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை தெரிந்துகொள்ளும் மனநிலைகூட இல்லை. இதனால், மருத்துவ ரீதியிலான ஆதாரங்களை போலீஸாா் திரட்ட ஆரம்பித்துள்ளனா். மேலும், இவ்வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளாா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை நியாய விலைக் கடைகள் செயல்படும்

சென்னை: பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜன.10) வெள்ளிக் கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத் தொகை: துரைமுருகன் சுவாரஸ்யம்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம் என்று நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார்.இதனால், சட்டப்ப... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: பொங்கல் தொகுப்பு விநியோகம் ரத்து!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை.ஈரோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, அந்த த... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் மையப்பகுதியான கொக்கிரகுளம் பகுதியில்... மேலும் பார்க்க

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிரான தீர்மானம்: அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.பல்கலைக்கழக துணைவேந்தர... மேலும் பார்க்க

பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? - சீமான் சர்ச்சை பேச்சு!

வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரி... மேலும் பார்க்க