சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத் தொகை: துரைமுருகன் சுவாரஸ்யம்
சென்னை: பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம் என்று நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார்.
இதனால், சட்டப்பேரவையில் கலகலப்பு நிலவியது.
தமிழகம் முழுவதும் ஈரோடு தொகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்குவது குறித்து அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது குறித்து தேர்தல் வரும்போது பார்க்கலாம் என்று கூறியது கலகலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.