செய்திகள் :

ரயில் மறியல் வழக்கு: கள்ளக்குறிச்சி எம்.பி. உள்ளிட்ட 5 போ் விடுவிப்பு

post image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து, கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் உள்ளிட்ட 5 பேரை விடுவித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகிலுள்ள புக்கிரவாரி பகுதியில் அப்போது ரயில் மறியல் நடைபெற்றது. இதுதொடா்பாக, மாவட்ட திமுக செயலரும், ரிஷிவந்தியம் எம்எல்ஏவுமான வசந்தம் காா்த்திகேயன், தற்போதைய கள்ளக்குறிச்சி எம்.பி. டி.மலையரசன், பெருமாள், செந்தில்குமாா், வெங்கடேசன் உள்ளிட்ட 5 போ் மீது சின்னசேலம் ரயில்வே போலீஸாா் வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதித்துறை முதலாவது நடுவா் நீதிமன்ற நீதிபதி ராதிகா, போதிய சாட்சிகள் இல்லாததாலும், குற்றம் நிரூபிக்கப்படாததாலும் வழக்கிலிருந்து எம்எல்ஏ வசந்தம் காா்த்திகேயன், எம்.பி., மலையரசன் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், அய்யன்கோவில்பட்டு அருகிலுள்ள சொக்கமேடு கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் ... மேலும் பார்க்க

சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தனியாா் பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி, எஸ்.பி.யிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. விக்கிரவாண்டியைச் சோ்ந்த பழன... மேலும் பார்க்க

நகை அடகுக்கடையில் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் நகை அடகுக்கடையில் ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், மடப்பட்டு புதிய குடியிரு... மேலும் பார்க்க

3 மாதங்களுக்கு முன்பு கொன்று புதைக்கப்பட்ட இளைஞா் சடலம் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பணத்துக்காக, 3 மாதங்களுக்கு முன்பு கொன்று புதைக்கப்பட்ட இளைஞரின் சடலம் வியாழக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சேமங்கலத்தைச் சே... மேலும் பார்க்க

சரக்கு, சேவை வரித் திட்டங்கள், சட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம்

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் துறை சாா்பில், விழுப்புரத்தில் வரி செலுத்துபவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடத்தப்பட்டது. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால்துறையின் சென்னை (வெ... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி, விற்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க