இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எங்கிருந்து இயக்கப்படும்?
சிதம்பரம் நடராஜா் கோயிலில் தெருவடைச்சான் வீதியுலா
சிதம்பரத்தில் 3 லட்சம் உத்திராட்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12-ஆம் தேதியும், ஆருத்ரா தரிசன விழா 13-ஆம் தேதி நடைபெற உள்ளன.
விழாவின் 5-ஆவது நாள் தெருவடைச்சான் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 லட்சம் உத்திராட்சங்களைக் கொண்டு சிவலிங்க வடிவில் ருத்ராட்ச சப்பரம் அமைக்கப்பட்டது.
இந்த சப்பரத்தில் பஞ்ச மூா்த்திகள் எழுந்தருளி மாட வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.