மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை
பிக் பாஸ் 8: தர்ஷிகா, அன்ஷிதாவிடம் மன்னிப்பு கோரிய வி.ஜே. விஷால்!
பிக் பாச் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் வி.ஜே. விஷால் இரு பெண்களிடம் மன்னிப்புக் கோரினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அன்ஷிதா, தர்ஷிகா ஆகியோரிடம் மன்னிப்பு விஷால் கேட்ட விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். இவர்களில் 5 பேர் இறுதிப் போட்டிக்குச் செல்லவுள்ளனர். இதில் ரயான் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளதால், மீதம் 4 பேர் இறுதிப் போட்டிக்குச் செல்ல தீவிரமாக முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரசியமாக்க நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் 8 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
காதல் கதையால் மன உளைச்சல்
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்களில் சாச்சனா, சுனிதா மற்றும் ஆர்ணவ் ஆகியோர் வி.ஜே. விஷாலின் காதல் கதை குறித்து அதிகமாகப் பேசினர்.
தர்ஷிகாவிடம் நெருங்கிப் பழகிய விஷால், அவர் வெளியேறிய பிறகு அன்ஷிதாவுடன் நெருங்கிப் பழகியதாகவும், ஆனால், அவர்கள் இருவருமே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், விஷால் மட்டும் போட்டியில் நீடித்து வருவதாகவும் குறிப்பிட்டுப் பேசினர்.
இரு பெண்கள் தங்கள் போட்டியில் இருந்து வெளியேறுவதற்கு விஷால் காரணம் என்பதப் போன்ற பிம்பம் உருவானதால், விஷால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதனால் மனமுடைந்த விஷால், தர்ஷிகாவிடமும் அவரின் தாயாரிடமும் மன்னிப்புக் கோரினார். இதேபோன்று உண்மையான நட்பை வெளிப்படுத்திய அன்ஷிதாவிடமும் மன்னிப்புக் கோரினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு இருவரையும் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்கவுள்ளதாகவும் பிக் பாஸ் வீட்டின் கேமரா முன்பு கூறினார்.
பிக் பாஸ் வீட்டில் பலரும் உறங்கிக்கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில், விஷால் அழுதுகொண்டு மன்னிப்பு கேட்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | ஹிந்தி பிக் பாஸ்: ஸ்ருதிகா வெற்றிக்காக களமிறங்கிய நண்பர்கள்!