Clownfish: 'பெண்ணாக மாறும் ஆண் மீன்' - நீமூவின் வாழ்க்கையும், டிஸ்னி மறைத்த உண்ம...
வைகுந்த ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்
வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் தற்காலிக நின்றுசெல்லும்.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பரமபதவாசல் திறப்பு விழா நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை தற்காலிகமாக சென்னை - கன்னியாகுமரி விரைவு ரயிலானது (12633) ஸ்ரீரங்கத்தில் இரவு 9.50 மணிக்கு நின்று 9.52 க்குப் புறப்படும். கன்னியாகுமரி - சென்னை விரைவு ரயிலானது (12634) ஸ்ரீரங்கத்தில் இரவு 12.53 மணிக்கு நின்று 12.55 க்குப் புறப்படும். கொல்லம் - சென்னை விரைவு ரயிலானது (16102) ஸ்ரீரங்கத்தில் இரவு 9.38 க்கு நின்று 9.40 க்குப் புறப்படும். சென்னை - கொல்லம் விரைவு ரயிலானது (16101) ஸ்ரீரங்கத்தில் இரவு 9.33 க்கு நின்று 9.35 க்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.