செய்திகள் :

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி பயணம்?

post image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் சுரங்கம் தோண்டும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் சட்டப்பேரவையிலும் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனா்.

இதையும் படிக்க | டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு

தொடர்ந்து, தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தலைமையிலான பாஜக குழுவினா், அரிட்டாபட்டி அம்பலக்காரா்களுடன் மத்திய சுரங்கத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டியை ஜன. 22 அன்று சந்தித்து சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தனா். திட்டத்தை ரத்து செய்வது குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சா் கிஷண் ரெட்டி உறுதியளித்தாா்.

இதன்பின்னர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு ஜன. 23 அன்று அறிவித்தது. இதனை அரிட்டாப்பட்டி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன,. 26) அரிட்டாபட்டி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை காலையில் குடியரசு தின நிகழ்வுகள் முடிந்தபிறகு விமானம் மூலமாக மதுரை செல்லும் அவர், சாலை வழியாக அரிட்டாபட்டி சென்று அங்கு நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

குறுகிய காலத்தில் நிறைவடையும் பிரபல தொடர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3.30 மணிக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் திரவியம் ... மேலும் பார்க்க

பிரமிக்க வைத்த குடியரசு நாள் அலங்கார ஊர்தி!

குடியரசு நாளையொட்டி தில்லியில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.நாடு முழுவதும் குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. குடியரச... மேலும் பார்க்க

அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம்: விஜய்

குடியரசு நாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி தமிழகத... மேலும் பார்க்க

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய சிலுவைபுரம் கிராம மக்கள்!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசு நாளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து வீட... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக திடலில் குடியரசு நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.மாவட்ட ஆட்சியர் சி.பழனி தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்ப... மேலும் பார்க்க

விஜய் 69 படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள விஜய் 69 படத்தின்பெயரை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந... மேலும் பார்க்க