செய்திகள் :

அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா?

post image

நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரப்போவதாக பலர் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை த்ரிஷா லியோ, பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லியில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையே, கோட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி வைரலானார். அண்மையில், இவர் நடித்த மலையாளப் படமான ஐடெண்டி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

சினிமா மட்டுமல்லாது சில தொழில்களிலும் முதலீட்டாளராக இருக்கும் த்ரிஷாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அது குறித்து கேள்விகளையும் மறுத்து வருகிறார்.

இதையும் படிக்க: ஆங்கிலத்திலும் தயாராகும் ஜெயிலர் - 2!

இந்த நிலையில், சில நாள்களாக த்ரிஷா நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளார் என தகவல் பரவி வருகிறது. பல செய்தி நிறுவனங்களும் இதனைச் செய்தியாக வெளியிட்டன.

பின், த்ரிஷாவின் அம்மாவை தொடர்புகொண்டு அரசியலுக்கு த்ரிஷா வருவது உறுதியா? எனக் கேட்டதற்கு அவர், த்ரிஷா அரசியலுக்கு வரும் செய்தியில் உண்மையில்ல்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் எனத் தெரிவித்தாராம்.

இதனால், த்ரிஷா அரசியலுக்கு வரவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இயக்குநராகும் லப்பர் பந்து நாயகி?

நடிகை சஞ்சனா இயக்குநராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகை சஞ்சனா வதந்தி இணையத் தொடரில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து, லப்பர் பந்து படத்தில் நாயகியாக கலக்கினார்.இவர் இயக்குநர் மணிரத்னத்தின் உதவ... மேலும் பார்க்க

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 27.01.2025மேஷம்இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் லாபங்களைப் பெறுவீர்... மேலும் பார்க்க

செய்திகள் சில வரிகளில்...

டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் வெல்ல, ஆா். பிரக்ஞானந்தா, லியோன் லூக் மெண்டோன்கா டிரா செய்ய, அா்ஜுன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா தோல்வி கண்டனா். தற்போது குகேஷ்,... மேலும் பார்க்க

ஐஎஸ்பிஎல் சீசன் 2 கோலாகலத் தொடக்கம்

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) 2-ஆம் சீசன், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை, நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை வீழ்த்தியது. டென்னிஸ் பந்தில் கிரிக்... மேலும் பார்க்க

கோப்பையை தக்கவைத்தார் சின்னர்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி கோப்பையை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டார். கடந்த ஆண்டு... மேலும் பார்க்க

76-வது குடியரசு நாள் கொண்டாட்டம் - புகைப்படத் தொகுப்பு

குடியரசு நாள் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள், நாட்டின் உயர்நிலை ராணுவ அதிகாரிகள்... மேலும் பார்க்க