``எல்லோருக்கும் விலை உண்டு என்றவருக்கு பதவியா?'' -எல்.முருகன் முன்பு மோதிக் கொண்...
திரிவேணி சங்கமத்தில் நீராடி துறவிகளிடம் ஆசி பெற ஆவல்: அமித் ஷா
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் நீராடி, துறவிகளின் ஆசி பெற ஆவலாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
மகாகும்பம் என்பது சநாதன கலாசாரத்தின் தனித்துவமான சின்னமாகும். கும்பமே நல்லிணக்கத்தில் வேரூன்றிய சநாதன தர்மத்தின் வாழ்க்கைத் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
புனித நகரமான பிரயாக்ராஜில் நடைபெறும் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மாபெரும் விழாவில் சங்கமத்தில் நீராடி, துறவிகளிடம் ஆசி பெற நான் ஆவலாக உள்ளேன் என்று அவர் கூறினார்.
இன்று பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் அமித் ஷா நீராட உள்ளார். புரி மற்றும் துவாரகாவின் சங்கராச்சாரியார்கள் உள்பட பலரை மகா கும்பமேளாவில் உள்துறை அமைச்சர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 13ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26ஆம் தேதி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.