செய்திகள் :

தினம் தினம் திருநாளே!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 27.01.2025

மேஷம்

இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். திறமைக் கேற்ற பாராட்டுதல்களால் மனநிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்

இன்று புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். அரசியல்வாதிகளின் நோக்கங்கள் யாவும் நிறைவேறும். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவுகள் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்

இன்று உங்கள் திறமைக்கு தீனிபோட்டதுபோல் வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். இன்று கடன்கள் அனைத்தும் பைசலாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்

இன்று உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பலமும் வலிமையும்கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச்செலவுகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம்

இன்று தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். உணவு விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

கன்னி

இன்று குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யமான உறவு இருக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்

இன்று திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடன்பிறப்புகள் தக்கசமயத்தில் உதவுவார்கள். வீடு, மனை, வண்டி, வாகன யோகங்கள் அமையும். உற்றார்-உறவினர்கள் பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை பாராட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

விருச்சிகம்

இன்று கொடுக்கல்-வாங்கல் திருப்தி கரமாக அமையும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல லாபம் அமைந்து பொருளாதாரநிலை உயரும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு

இன்று பெரிய தொகைகளைக்கூட எளிதாக ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறமுடியும். நீண்ட நாட்களாக இழுபறி நிலையிலிருந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். மொத்தத்தில் சந்தோஷமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மகரம்

இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சில போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை மேன்மையாக அபிவிருத்தி செய்யமுடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்

இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பும் நல்ல மேன்மையை ஏற்படுத்தும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடு உங்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தரும். தொழிலாளர்கள் அனுகூலமாக செயல்படுவதால் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்

இன்று தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகப்பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனுகூலமானபலனை அடைவார்கள். தடைப்பட்ட பதவிகளும் கிடைக்கப்பெற்று கௌரவமானநிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

நான் பயிற்சி பெற்ற நடிகர் அல்ல: கார்த்தி

தான் பயிற்சி பெற்ற நடிகர் இல்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை (ஜன. 27... மேலும் பார்க்க

2025-ல் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் தமிழ்ப் படங்கள்!

இந்தாண்டில் பல தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளன.காலம் மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறது என்பது நமக்கும் நாம் பார்க்கும் திரைப்படங்களுக்கும் உள்ளே தொலைவுதான்போல. 2000 ஆம... மேலும் பார்க்க

சிம்புவின் அடுத்த படம்!

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியச... மேலும் பார்க்க

தீபாவளி வெளியீடாக எஸ்கே - 23?

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக ந... மேலும் பார்க்க

ரசிகர்களைக் கவர்ந்த எம்புரான் டீசர்!

நடிகர் மோகன்லாலின் எம்புரான் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்... மேலும் பார்க்க

சூர்யா - 45 அப்டேட்!

சூர்யா - 45 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளத... மேலும் பார்க்க