இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
சிம்புவின் அடுத்த படம்!
நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன் 48வது படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் முடிவடையாததால், சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் நிறைவடைந்தது.
இதையும் படிக்க: தீபாவளி வெளியீடாக எஸ்கே - 23?
பின், சிம்பு - 48 படத்தின் தயாரிப்பிலிருந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் விலகியதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பு பிப். 3 ஆம் தேதி வெளியாகும் என சிம்பு அறிவித்துள்ளார். இது சிம்புவின் 50-வது படமாக இருக்குமா இல்லை தேசிங்கு பெரியசாமி படத்திலிருந்து விலகி 48-வது படத்தை அறிவிக்கிறாரா என்றும் யார் இயக்குநர் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.