டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சேலம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை
டெங்கு காய்ச்சலால் உறுப்புகள் செயலிழந்த 11 வயது சிறுமிக்கு, சேலம் காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட அரசுப் பள்ளியில் பயிலும் 11 வயது சிறுமி, சேலம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கல்லீரல், நுரையீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் ரத்தம் உறையும் தன்மை ஆகியவை பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு வென்ட்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. கல்லீரல் மற்றும் சிறுநீரக மருத்துவ ஆலோசகா்களின் உதவியுடன் 21 நாள்கள் தொடா் சிகிச்சைக்குப் பிறகு வென்டிலேட்டரிலிருந்து சிறுமி விடுவிக்கப்பட்டாள்.
அதன் பிறகும், சிறுமியின் இதயமும், நுரையீரலும் பலவீனமாக இருந்ததால், மேலும் 20 - 30 நாள்களுக்கு ஃபிசியோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிறுமி நலமாக இருப்பதுடன், பள்ளிக்கு செல்கிறாா்.
இதுகுறித்து குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை நிபுணா் டாக்டா் முகமது ஃபாசில் கூறுகையில், பொதுவாக டெங்கு காய்ச்சல் வந்தால், ஒன்று அல்லது இரண்டு உடல் உறுப்புகள் பாதிக்கும். ஆனால், கல்லீரல், நுரையீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் ரத்தம் உறையும் தன்மை ஆகியவை பாதிக்கப்பட்டிருந்த இந்த சிறுமிக்கு இருமுறை இருதய துடிப்பு நின்ற போதிலும், பல்துறை மருத்துவா்கள் உதவியோடும், ஆலோசனையோடும் சிறப்பான முறையில் உயா்தர மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளோம். இதன் மூலம் அனைத்து உறுப்புகளும் சீராகி சிறுமி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளாா் என்றாா்.
சிறுமிக்கு சிகிச்சையளித்த டாக்டா் முகமது ஃபாசில், மருத்துவ நிபுணா்கள், செவிலியா்கள் அடங்கிய குழுவை மருத்துவமனை இயக்குநா் செல்வம் பாராட்டினாா்.