செய்திகள் :

யமுனை நதி விவகாரம்: கேஜரிவால் நேரில் ஆஜராக ஹரியாணா நீதிமன்றம் சம்மன்!

post image

யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஹரியாணா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

தில்லிக்கு தண்ணீா் வழங்கும் யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாகவும் அம்மோனியா எனப்படும் விஷம் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியதாகவும் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஹரியாணா முதல்வர் நைப் சிங் சைனி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க : நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை: கனடா ஆணையம் அறிக்கை

இந்த நிலையில், விஷம் கலப்பதாக பொய் கருத்து தெரிவித்து தில்லி மற்றும் ஹரியாணா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கேஜரிவால் மீது ஹரியாணா அரசு சோனிபட் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு தொடர்ந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி நேஹா கோயல், பிப். 17 ஆம் தேதி அரவிந்த் கேஜரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், ஆஜராகவில்லையெனில் எவ்வித கருத்தும் சொல்லவில்லை என்று கருதி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

யமுனையை நீர்நிலையாக பார்க்காமல் உயிராகப் பார்க்க வேண்டும்! -ராகுல் காந்தி

யமுனையை நீர்நிலையாக பார்க்காமல் ஒரு உயிராகப் பார்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தலைநகரான தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கைது!

பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, ஏமாற்றிய காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ராத்தோர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ராத்தோர், தன்னை திருமணம் செய்வதாகக் கூறி, பா... மேலும் பார்க்க

அமெரிக்கா, சீனா ஏஐ தளங்களுக்கு போட்டியாக இந்தியா ஏஐ?

வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு போட்டியாக இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்தார்.சாம் ஆல்ட்மேன் என்ற அமெரிக்கரின் ஓபன் ஏஐ நிறுவனத... மேலும் பார்க்க

பஞ்சாப் முதல்வர் இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தலைநகரான தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ... மேலும் பார்க்க

ராகுல் மீதான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

வீட்டுப் பணியாளர்களுக்கு 7 வாக்குறுதிகள்.. ஆம் ஆத்மி வெளியீடு!

தில்லி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசு இல்லங்களில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களுக்கு எழு வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. தலைநகரில் பிப்ரவரி 5ல் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையி... மேலும் பார்க்க