செய்திகள் :

`சீமான் உளவு பார்த்து சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம்..!' - திமுக ராஜீவ் காந்தி

post image

`சீமான் கூறிய பொய்களை நம்பி...'

திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழீழம் குறித்து சீமான் பேசும் அனைத்தும் பொய் என்று அம்பலமாகிவிட்டது. சீமான் என்ற போலி பிம்பம் பொய்களாலும், வன்மத்தாலும் கட்டமைக்கப்பட்டது என்பது தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. சீமான் கூறிய பொய்களை நம்பி வாழ்க்கையை இழந்த லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன்.

ராஜீவ் காந்தி

எனவே இதை பொதுமக்களிடம் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு தலைவர்கள் ஈழத்துக்கு சென்று வந்தனர். அதன் பிறகு அந்த மண் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை. அதேபோல காட்டிக்கொடுக்கப்படவும் இல்லை. சீமான் சென்று வந்த பிறகு தமிழீழம் மண் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டது.

`சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்ததால் தான்'

ஆறு மாதங்களுக்கு மேலாக தமிழீழத்தில் தங்கியிருந்த சீமான், விடுதலை புலிகளின் பதுங்கு இடங்கள், போர் தளவாடங்கள், தளபதிகள் உள்ளிட்டவை குறித்து உளவு பார்த்து சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. சீமான் பிரபாகரனை 10 நிமிடங்கள் கூட சந்திக்கவில்லை என்று ராஜ்குமார் கூறியுள்ளார்.

சீமான்

ஈழத்திலிருந்து வந்த அவர் அங்கு என்ன நடந்தது என்று ஏன் பொதுமக்களிடம் கூறவில்லை. ஈரோட்டில் பொதுக்கூட்டத்தில் பேசி கைது செய்யப்பட்ட பிறகு 2008-ம் ஆண்டு இறுதியில் கோவை சிறையிலிருந்து வெளிவந்தவுடன் சீமான் ஈழ ஆதரவுக்காக போராடவில்லை. மாயாண்டி குடும்பத்தார்  படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுவிட்டார்.

`சீமானுக்கு தனி ஈழம் குறித்து அக்கறை இல்லை'

‘முத்துக்குமார் இறப்புக்கு வாருங்கள்’ என்று அழைத்தபோது எங்களை கொச்சையான வார்த்தைகளால் திட்டினார். பிரபாகரன் இறந்துவிட்டார் என்று தெரிந்தும் திட்டமிட்டு பிரபாகரனின் இறப்பை மறைத்து தமிழகத்தில் எண்ணிலடங்காத இளைஞர்களின் அரசியலை சிதைத்திருக்கிறார். சீமானுக்கு தனி ஈழம் குறித்து அக்கறை இல்லை.

ராஜீவ் காந்தி

‘தமிழ்நாடு அரசியலில் எனக்கு வாக்களித்தால் ஈழத்தை வாங்கி விடுவேன்’ என்று சீமான் கூறி வருகிறார். இது பிரபாகரனையும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தும செயல்.” என்றார்.

தொடர்ந்து சீமான் வாட்ஸப்பில் வைத்திருந்த ஸ்டேட்டஸின் ஸ்க்ரீன்ஷாட்டை நகலை ராஜீவ் காந்தி காண்பித்தார்.

`சீமான் இன துரோகம் செய்துள்ளார்'

அதில், ‘சமஸ்கிருதத்த திணிப்பை விட இந்தி திணிப்பை விட பெரியார் திணிப்பு ஆபத்தானது’ என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய ராஜீவ் காந்தி, “சீமான் ஆர்.எஸ்.எஸ்-ஸை விட ஆபத்தானவர். ஆர்எஸ்எஸின் கைக்கூலியாக அனைத்தையும் காட்டிக் கொடுக்கின்ற ஆளாக இருக்கிறார். அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய ஒரு அசிங்கம் சீமான். பிரபாகரனை சீமான் சந்தித்தது சில நிமிடங்கள் தான்.

சீமான்

இதுதொடர்பான சில வீடியோ காட்சிகள் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் இடம் இருக்கிறது. அது இன்னும் சில நாள்களில் வெளியில் வரும். சீமான் இன துரோகம் செய்துள்ளார். மக்களின் போராட்டத்தை  தன்னுடைய சுயலாபத்துக்காக நிறுத்திவிட்டார். ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் டெபாசிட் கூட வாங்க முடியாது.

உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பேசுகிற பண்பற்ற மனிதர் சீமான். திட்டமிட்டு தமிழர்களை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட கைக்கூலி. பிரபாகரனுடன் இருந்தவர்களை எல்லாம் துரோகி என்று அந்நியப்படுத்திவிட்டு, தான் மட்டும்  யோக்கியன் என்று கூறி வருகிறார். இந்த யோக்கியன் இனத்துக்காக என்ன செய்திருக்கிறார்.  சீமான் பாஜகவால் இயக்கப்படுகிறார்.

தவெக விஜய்

சீமானுக்கு மாநில அங்கீகாரம் வாங்கி கொடுத்தது விஜய் தான்.  தற்போது விஜய்க்கு ஆதரவு வருவதால் விஜய்யை கொச்சையாக பேசி வருகிறார். திராவிட இயக்கத்தின் ஆசானை கொச்சைப்படுத்தும் போது எடப்பாடி, விஜய் போன்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்ப்பது அயோக்கியத்தனம்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`22 வருஷமா போராடிட்டு இருக்கோம்; ஆனா அரசு...' - ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பேட்டி

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பு... மேலும் பார்க்க

விடாத ஊழியர்கள்.. மீண்டும் பறந்த மெயில்.. பணிந்தது கோவை ஐடி நிறுவனம்..!

கோவை ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் ‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வந்தது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐடி நிறுவனத்துக்கு பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கிளைகள் உள்ளன.... மேலும் பார்க்க

'Ramados - Seeman' விரட்ட Stalin போட்ட விழுப்புரம் ஸ்கெட்ச்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,ராமதாஸ் கொடுக்கும் நெருக்கடி, ஆக்டிவ் மோடுக்கு திரும்பிய விஜய். இறங்கி அடிக்கும் எடப்பாடி. சீமான், ஆர்.என் ரவி என பல்வேறு குடைச்சல்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் எதிர்கொள்ள, ப... மேலும் பார்க்க

தொடர் சர்ச்சையில் Seeman! | உதயநிதிக்கு பரிசு கொடுத்த CM? | Vengaivayal | NTK | DMK Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* அங்கீகரிக்கப்பட்டுப் பதிவுசெய்யப்பட்ட `சாம்சங் தொழிற்சங்கம்' - வரவேற்று மகிழும் தொழிலாளர்கள்! * பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித் குமாருக்கு நடிகர் ரஜினி... மேலும் பார்க்க