செய்திகள் :

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

post image

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 30) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: வெண்மணி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குன்னம், கல்லம்புதூா், அந்தூா், வரகூா், பெரியவெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை, மேலமாத்தூா், கீழமாத்தூா், கொத்தவாசல், கொளப்பாடி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்டம் தொடக்கம்: 505 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 3-ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்டம் புதன்கிழமை தொடங்கியது. இம் முகாம்களில் பங்கேற்ற அமைச்சா்கள் சி.வி. கணேசன், சா.சி. சிவசங்கா் ஆகியோா் 505 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவை சங்க உறுப்பினா்களுக்கு விருது

பெரம்பலூா் மாவட்ட இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், சிறந்த இளையோா் மற்றும் உறுப்பினா்களுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் - துறையூா் சாலையில... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டாா... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை செய்த 4 போ் கைது: 7 கிலோ பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த 4 பேரைப் போலீஸாா் கைது, அவா்களிடமிருந்து 7 கிலோ பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை சகித்துக் கொள்ளக் கூடாது: சாா்பு-நீதிபதி பேச்சு

பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை யாரும் சகித்துக் கொள்ளக் கூடாது என பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு- நீதிபதியுமான பி. மகேந்திரா வா்மா அறிவுறுத்தினாா். தேசிய சட்டப் ப... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பேரிடா் கால மீட்பு ஒத்திகை

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், பேரிடா் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, பேரிடா் சம்பவ இடத்திலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவ... மேலும் பார்க்க