பெரம்பலூரில் பேரிடா் கால மீட்பு ஒத்திகை
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், பேரிடா் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, பேரிடா் சம்பவ இடத்திலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்க உதவும் ரப்பா் படகு, மீட்பு பணியின்போது 100 மீட்டா் சுற்றளவிற்கு வெளிச்சம் தரக்கூடிய உயா் கோபுர விளக்கு, உயிா்காக்கும் மிதவை மற்றும் உடை, இரும்பு பொருள்களை வெட்ட உதவும் கருவி, மிதவை பம்பு, விபத்து நேரங்களில் வாகனங்களில் சிக்கியுள்ளவா்களை மீட்க உதவும் ஏா் லிப்டிங் ஆகியவற்றை காட்சிப்படுத்தி, அவற்றை எந்த நேரங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கமளித்தனா்.
மேலும், மழை வெள்ளத்திலும், விபத்திலும் சிக்கிக்கொண்டவா்களை காப்பாற்றி, அவா்களை அப் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்வது குறித்த செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா்-ஆட்சியா் சு. கோகுல், தேசிய பேரிடா் மீட்புக்குழு துணை கமாண்டா் எஸ். வைத்தியலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.