இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
ரசிகர்களைக் கவர்ந்த எம்புரான் டீசர்!
நடிகர் மோகன்லாலின் எம்புரான் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில், மோகன்லாலின் உதவியாளராக பிருத்விராஜ் சையத் மசூத் என்கிற கதாபாத்திரத்திலும் நடிகர் டொவினோ தாமஸ் கேரள மாநில முதல்வராகவும் நடித்துள்ளனர்.
பான் இந்தியா திரைப்படமாக வருகிற மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் டீசர் நேற்று வெளியானது.
இதையும் படிக்க: சூர்யா - 45 அப்டேட்!
படத்தின் டீசர் எடிட்டிங் மற்றும் பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்ததுடன் கதை மீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசியல் மற்றும் யாரென தெரியாத குரேஷி அப்ராம் (மோகன்லால்) இப்பாகத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துவார் என சிலர் ஊகங்களைப் பேச ஆரம்பித்துவிட்டனர். படத்தின் முதல் பாகத்தைப்போல் இரண்டாம் பாகத்திற்கும் கதை, திரைக்கதை, வசனத்தை முரளி கோபி எழுதியுள்ளார்.
எம்புரான் டீசர் யூடிபில் இதுவரை 50 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.