சூர்யா - 45 அப்டேட்!
சூர்யா - 45 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், த்ரிஷா, ஸ்சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தை இயக்குவதுடன் ஆர். ஜே. பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: நடிகர் விஜய்க்கு 3 கதைகள் சொன்னேன்: மகிழ் திருமேனி
படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாள்களில் சென்னையில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான, செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.