சா்வதேச மாஸ்டா்ஸ் கிரிக்கெட் லீக்: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-இலங்கை மோதல்
அக்னி தீர்த்தம்: `உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா' -குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் சிறை
ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த தனியாருக்கு சொந்தமான டீ கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அங்கு அறையின் மறைவான இடத்தில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் அங்கிருந்த ரகசிய காமிராவை பறிமுதல் செய்து, உடை மாற்றும் அறையை நடத்தி வந்த ராஜேஷ் கண்ணன் (33) மற்றும் அங்கு டீ மாஸ்டராக பணிபுரிந்த மீரான் மைதீன் (37) ஆகிய இருவரையும் கடந்த டிசம்பர் 23-ல் கைது செய்யது நீதிமன்ற உத்தரவுப்படி ராமநாதபுரம் சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில், ராஜேஷ் மற்றும் மீரான் மைதீன் ஆகியோர் மீது குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.