மேற்குக் கரையில் மேலும் 2 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் போா் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் படையினா் மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையில் மேலும் இரு பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
துல்காரெம் பகுதியில் 23 வயது இளைஞரையும், ஜெனின் பகுதியில் 25 வயது இளைஞரையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை காலை வரை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போது இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், உயிரிழந்த இளைஞா்கள் ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்களா இல்லையா என்பது குறித்து அமைச்சகம் எதையும் தெரிவிக்கவில்லை. இந்த உயிரிழப்பு தொடா்பாக இஸ்ரேல் ராணுவமும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
காஸாவை ஆளும் ஹமாஸ் படையினா் இஸ்ரேலுக்குள் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து பொதுமக்கள் 984 போ் உள்பட 1,970 பேரை படுகொலை செய்தனா். அதையடுத்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 47,417 போ் உயிரிழந்தனா். இதற்கிடையே, ஆயுதக் குழுவினருக்கு எதிராக மேற்குக் கரை பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களிலும், அங்கு வசிக்கும் யூத குடியேற்றவாசிகள் நடத்தும் தாக்குதல்களிலும் இதுவரை 883 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.