நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
Rohit: ``தயவு செய்து ஓய்வுபெறாதீர்கள்; வெறுப்பவர்கள்..." - ரோஹித்துக்கு 15 வயது இளம் ரசிகர் கடிதம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கையோடு, சர்வதேச டி20 கிரிக்கெட் ஃபார்மட்டிலிருந்து ஓய்வுபெற்றார். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடிவருகிறார். இதில், கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கெதிராக டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இந்திய அணி இழந்தது.
இந்தத் தோல்விகளுக்கு, ரோஹித் சர்மாவின் பேட்டிங் சொதப்பலும் ஒரு காரணம். இதனால், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற விமர்சனங்கள் ரோஹித் மீது குவிந்தன. இந்த நிலையில், யதார்ட் சாப்ரியா என்ற 15 வயது ரசிகர் ஒருவர் ரோஹித் சர்மாவுக்கு எழுதியிருக்கும் உணர்ச்சிப்பூர்வமான கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தக் கடிதத்தில், ``இந்த விளையாட்டை நான் பார்ப்பதற்கே நீங்கள்தான் கரணம். உங்கள் காலத்தில் நான் பிறந்தது என் அதிர்ஷ்டம். Form is temporary, class is permanent. சமீப காலங்களில் நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும், நீங்கள் சரியான பாதையில் செல்வதை என்னால் பார்க்க முடிகிறது. நேற்று நீங்கள் அடித்த 3 சிக்ஸர்கள் (ரஞ்சிப் போட்டியில் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அடித்தவை) அற்புதமாக இருந்தது. வெறுப்பவர்கள் வெறுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
உங்களின் கேப்டன்சி சிறப்பாக இருக்கிறது. களத்தில் சிறந்த குணமுடைய நீங்கள், ஒவ்வொரு ஃபார்மட்டிலும் வீரராகவும், கேப்டனாகவும் ஜெயித்திருக்கிறீர்கள். என்றும் உங்களைப் பின்தொடர்வேன். உங்களுக்காக அனைத்து போட்டிகளையும் பார்ப்பேன். டிவி-யை ஆன் செய்யும்போது, ஆட்டத்தின் இன்னிங்க்ஸை நீங்கள் தொடங்குவதை ஒருவேளை என்னால் பார்க்க முடியாது என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. தயவுசெய்து ஒருபோதும் ஓய்வுபெறாதீர்கள்.
15 வயதுடைய நான், நன்றாகப் பேசக்கூடிய மற்றும் ஆர்வமிக்கவன். ஒரு விளையாட்டு ஆய்வாளராக வேண்டும் என்பது எனது கனவு. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்து இன்டர்ன்ஷிப்பை முடித்திருக்கிறேன். உங்களால் உதவ முடியுமென்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். ஐ லவ் யூ ரோஹித். நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று எனக்குத் தெரியும்." என்று அந்தச் சிறுவன் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY