செய்திகள் :

James Faulkner: இந்தியாவின் மரண பயம்; உலகக்கோப்பையின் ஆட்டநாயகன்- Ghost ஃபால்க்னரை ஞாபகமிருக்கிறதா?

post image
2013 இல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்திருந்தது. அப்போது இரு அணிகளும் ஆடிய ஓடிஐ சீரிஸை மறக்கவே முடியாது. ஏனெனில், அப்போது மொத்தம் 7 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இப்போதெல்லாம் 7 போட்டிகள் கொண்ட ஒரு தொடரை பார்க்கவே முடிவதில்லை. அதனாலயே அந்தத் தொடர் கொஞ்சம் ஸ்பெஷல்தான்.

James Faulkner
ரோஹித் சர்மா இரட்டைச் சதம் அடித்திருப்பார். கோலி ஆக்ரோஷமாக சதம் அடித்திருப்பார். தோனி வழக்கம்போல இக்கட்டான கட்டங்களில் இறங்கி அடித்திருப்பார். அப்படி இந்தியாவின் ஸ்டார்கள் அத்தனை பேரும் ஜொலித்தத் தொடர் அது. ஆனாலும், இப்போது அந்தத் தொடரை அசைபோட்டு பார்த்தாலும் முதலில் நினைவில் வருவது தோனியின் முகமோ கோலியின் முகமோ அல்ல. 6 அடிக்கும் மேல் உயரமுள்ள க்ளீன் ஷேவிலும் Rugged ஆகத் தெரியும் ஜேம்ஸ் ஃபால்க்னரின் முகம்தான் மின்னலடித்ததைப் போல நினைவுக்கு வருகிறது.
Faulkner

மின்னல் வீரன் - ஃபால்க்னர்

நிஜமாகவே அந்தத் தொடரில் ஃபால்க்னரின் பெர்பார்மென்ஸ் மின்னலடித்ததை போலத்தான் இருந்தது.

மொஹாலியில் நடந்த 3 வது ஓடிஐ போட்டி அது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ரோஹித், தவான், யுவராஜ், ரெய்னா என டாப் ஆர்டர் மொத்தமும் காலி. 76-4 என இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கிறது. அப்போது கோலியுடன் இணைகிறார் தோனி. ஓரளவுக்கு நல்ல பார்ட்னர்ஷிப். இந்திய அணி 148 ரன்களை எட்டிய சமயத்தில் கோலியும் அவுட். கோலி 68 ரன்களை எடுத்திருந்தார். தோனி இதற்கு மேல் ஆடியதுதான் அழுத்தமான Captain's Knock. டெயில் எண்டர்களுடன் கூட்டணி சேர்ந்து தனது ட்ரேட் மார்க் ஆட்டத்தை ஆடியிருந்தார். கடைசி வரை நாட் அவுட்டாக இருந்து 121 பந்துகளில் 139 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணியும் 303 ரன்களை எட்டியது. 300+ ஸ்கோர் என்பதால் எப்படியும் ஜெயித்து விடுவோம் என ரசிகர்களும் தெம்போடு இருந்தனர். தோனியின் மற்றுமொரு முரட்டு இன்னிங்ஸ் என்பதால் தோனி ரசிகர்களும் காலரைத் தூக்கிவிட்டு சுற்றிக்கொண்டிருந்தனர். ஆனால், அந்த மிதப்புக்கெல்லாம் சேஸிங்கில் ஆப்பு வைத்தார் ஃபால்க்னர்.

சேஸிங்கில் வைத்த ஆப்பு

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்குக் கடைசி 9 ஓவர்களில் 91 ரன்கள் தேவை. 6 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். வோக்ஸ் நன்றாக ஆடிக் கொண்டிருந்தாலும் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார். ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தேவை என்பதை அவரின் பேட்டிங்கின் மூலம் எட்டவே முடியாதென்பது தெரிந்தது. இந்த சமயத்தில்தான் ஃபால்க்னர் உள்ளே வந்தார். ஆஸ்திரேலிய லைன் அப்பில் நம்பக்கூடிய வகையிலான கடைசி பேட்டர். ரன்ரேட் அழுத்தம் அதிகம் இருந்ததாலும், காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் பெரிதாக இல்லை என்பதாலும் இந்திய பௌலர்கள் டெத்தில் மிரட்டிவிடுவார்கள் எனும் நம்பிக்கை இருந்தது.

James Faulkner

ஆனால், இந்த கணிப்புகளையெல்லாம் தாண்டி மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டு அந்த சேஸிங்கை 3 பந்துகளை மீதம் வைத்து முடித்துக் கொடுத்திருந்தார் ஃபால்க்னர். கடைசி 8 ஓவர்களில் 4 ஓவர்களை அஷ்வின் வீசியிருந்தார். அந்த 4 ஓவர்களில் ஃபால்க்னர் ரிஸ்க் எடுக்கவே இல்லை. சிங்கிள் மட்டுமே தட்டினார். மீதமிருக்கும் 4 ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்கள் வீசினர். அதை டார்கெட் செய்தார். குறிப்பாக, இஷாந்த் சர்மா வீசிய 18 வது ஓவர்தான் கேம் சேஞ்சிங் ஓவர். அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள். 4 சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் அடித்திருந்தார். மொஹாலியில் கூடியிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயமும் நொறுங்கிப் போனது. 3 பந்துகளை மீதம் வைத்து போட்டியை வென்று கொடுத்துவிட்டார். 220 ஸ்ட்ரைக் ரேட்டில் 64 ரன்களை எடுத்திருந்தார்.

'Captain Cool' என போற்றப்பட்ட தோனியே Post Match Presentation இல் இந்திய பௌலர்கள் மீது கடுப்பாகி வார்த்தைகளை விட்டார். 'இவர்களெல்லாம் இண்டர்நேஷனல் போட்டியில் ஆடுபவர்கள். இவர்களுக்கு எல்லாவற்றையும் 'Spoon feed' செய்ய முடியாது.' '300 ரன்கள் அடித்தும் போதவில்லை. இப்படியொரு பிட்ச்சில் இன்னும் அதிக ரன்களை பேட்டர்கள் எடுத்திருக்க வேண்டும்.' 'பார்ட் டைம் பௌலர்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.' என அத்தனை டிபார்ட்மென்ட்களையும் பப்ளிக்காக வெளுத்தெடுத்தார் தோனி. இந்த சம்பவத்திற்கு காரணமாக அமைந்தது 22 வயதே ஆகியிருந்த ஃபால்க்னர்.
James Faulkner

ஃபால்க்னர் ஆடிய ருத்ரதாண்டவம்

அந்தத் தொடர் முழுவதுமே ஒரு ஆல்ரவுண்டராக ஃபால்க்னர் ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார். பெங்களூருவில் நடந்த 7 வது ஓடிஐ போட்டியில் ரோஹித் இரட்டைச்சதம் அடித்திருந்தார். இந்தியா 383 ரன்களை எட்டியது. ஆஸ்திரேலியா சேஸிங். 138 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆஸ்திரேலியாவின் தோல்வி உறுதியாகிவிட்டது. அப்படித்தான் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஃபால்க்னர் மீண்டும் ஒரு மேஜிக்கல் இன்னிங்ஸை ஆட ஆரம்பித்தார். 73 பந்துகளில் 116 ரன்கள். இந்திய பௌலர்கள் அத்தனை பேரையும் ஓட ஓட அடித்தார். கடைசி வரை போராடி 45 ஓவர்களில் 326 ரன்கள் வரை எடுத்துச் சென்று அவுட் ஆனார். கடைசி விக்கெட் அவர்தான். நின்றிருந்தால் கட்டாயம் போட்டியை முடித்துக் கொடுத்திருப்பார். எப்படியோ அந்தத் தொடர் முழுவதுமே ஃபால்க்னர் இந்திய ரசிகர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.

James Faulkner

பேட்டராக மட்டுமில்லை, பௌலராகவும் கலக்கினார். 2 வது ஓடிஐயில் இந்தியா ஒரே ஒரு விக்கெட்டை இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை எளிதாக வென்றிருக்கும். அந்தப் போட்டியில் இந்தியா இழந்த ஒரு விக்கெட்டையும் ஃபால்க்னர்தான் வீழ்த்தியிருந்தார். அப்படி மற்ற பௌலர்கள் சோபிக்காத தருணத்திலும் ஃபால்க்னர் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அதனால்தான் அந்தத் தொடர் என்றாலே ஃபால்க்னர்தான் ஞாபகத்துக்கு வருவார்.

இளம் வயதிலேயே உச்சம்:

2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல் லிலும் கலக்கியிருப்பார். அந்த ஒரு சீசனில் மட்டும் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். 32 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த ப்ராவோவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் ஃபால்க்னர்தான் இருந்தார். அந்த இரண்டு ஆண்டுகளும் ஃபால்க்னர் தொட்டதெல்லாம் ஹிட்டுதான். 24 வயதிலேயே 2015 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடினார்.

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மூன்றுமே முக்கியமான விக்கெட்டுகள். நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து ஆரம்பத்திலேயே தடுமாறியிருந்தது. ராஸ் டெய்லரும் க்ராண்ட் எலியாட்டும் இணைந்து 111 ரன்களைச் சேர்த்திருந்தனர். க்ராண்ட் எலியாட் அபாயமான ஆள் வேறு.

Faulkner

அரையிறுதியில்தான் தென்னாப்பிரிக்காவை ஒற்றை ஆளாக காலி செய்திருப்பார். அதனால் ஆஸ்திரேலியா கொஞ்சம் உதறலோடுதான் அந்த பார்ட்னர்ஷிப்பை பார்த்தது. பயம் காட்டிய அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தது ஃபால்க்னர்தான். ராஸ் டெய்லர், க்ராண்ட் எலியாட் என இருவரின் விக்கெட்டையும் ஃபால்க்னர்தான் எடுத்துக் கொடுத்திருந்தார். கூட கோரி ஆண்டர்சனின் விக்கெட்டும். இதற்காகவே அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இளம் வயதிலேயே ஃபால்க்னர் ஆஸ்திரேலியா அணியில் உச்சத்தை எட்டினார். ஆனால், எவ்வளவு சீக்கிரம் உச்சத்தை எட்டினாரோ அவ்வளவு சீக்கிரமாக அணியிலிருந்து ஓரங்கட்டவும் செய்யப்பட்டார். இளம் வயதிலேயே அதிகமான போட்டிகளில் ஆடியதால் முட்டியில் பலத்த காயங்களை எதிர்கொண்டார். அதனால் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா என முக்கியமான நாடுகளுக்கு எதிரான தொடர்களில் ஆட முடியாமல் ஓய்வில் இருந்தார்.

கடினமான ஆள் என்கிற இமேஜ்

ஒரு வீரராகவும் ஹேண்டில் செய்வதற்கு கடினமானவர் எனும் பெயரை பெற்றார். டிம் பெய்னின் நிச்சயதார்த்த பார்ட்டியில் கலந்துகொண்டு குடித்துவிட்டு கார் ஓட்டி கேஸ் வாங்கியிருந்தார். கையாள்வதற்கு கடினமான ஆள் எனும் இமேஜ் ஒட்டிக்கொண்டது. தொடர் காயங்களால் அவதியுமுற்றார். விளைவு, 2017 லேயே ஆஸ்திரேலிய அணிக்கான ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டார். 'என்னைப் பார்த்தால் கொஞ்சம் வயதானவன் என நினைப்பார்கள். என்னுடைய வயதை சொல்லும் போது ஆச்சர்யப்படுவார்கள். மற்ற வீரர்கள் 30 வயதுக்கு மேல் சாதித்ததை நான் என்னுடைய 20 களின் தொடக்கத்திலேயே செய்துவிட்டேன். அதுவே எனக்கு மகிழ்ச்சிதான்.' என ஃபால்க்னரே ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.

Faulkner

நொடிப்பொழுதில் வானை கிழித்து கீழிறங்கி காணாமல் போகும் மின்னலை போன்றவர்தான் ஃபால்க்னர். ஃபால்க்னர் ஆடிய இன்னிங்ஸில் மறக்க முடியாதது எது என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

சச்சின், தோனி, கோலி, அஸ்வின்... பத்ம ஶ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர்கள் யார்?

1998ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்ற சச்சினுக்கு 2008ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 2014ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார்.இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் டயான எடுல்ஜி 2002ம் ஆண்ட... மேலும் பார்க்க

Shan Masood: ``உங்கள் கேள்வியில் மரியாதை இல்லை" - செய்தியாளரிடம் கோபப்பட்ட பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் அபார வெற்றிபெற்று, தொடரை சமன் செய்திருக்கிறது. முதல் டெஸ்டில், ஷான் மசூத்... மேலும் பார்க்க

Rohit: ``தயவு செய்து ஓய்வுபெறாதீர்கள்; வெறுப்பவர்கள்..." - ரோஹித்துக்கு 15 வயது இளம் ரசிகர் கடிதம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கையோடு, சர்வதேச டி20 கிரிக்கெட் ஃபார்மட்டிலிருந்து ஓய்வுபெற்றார். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக... மேலும் பார்க்க

Kamindu Mendis: ICC-யின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது வென்ற கமிந்து மெண்டிஸ் - யார் இவர்?

ஐ.சி.சி.யின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றிருக்கிறார்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களில் ஒருவருக்கு ஐ.சி.சி.யின் சார்பில், ஆண்டுதோறும் வளர்ந்து வரு... மேலும் பார்க்க

Ashwin: "பிசிசிஐ தேர்வுக்குழுவின் தலைவராக நான் போவேனா?" - அஷ்வின் சொல்வதென்ன?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வு முடிவை அறிவித்தார்.சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் அஸ்வினுக்கு... மேலும் பார்க்க

Rohit Sharma: 'அதிரடி தொடக்கம்; ஆனாலும் ஃபெயிலியர்!' - ரஞ்சியில் மீண்டும் சொதப்பும் ரோஹித் சர்மா!

நடப்பு ரஞ்சிக் கோப்பைத் தொடரின் ஆறாவது சுற்றுப்போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.மும்பை அணிக்காக ஆடிவரும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று 3 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இன்று இ... மேலும் பார்க்க