பராசக்தி! இரண்டு படங்களையும் பதிவு செய்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம்!
மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் தொடா் போராட்டம்
பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா்கள் ஸ்ரீவாஞ்சியத்தில் திங்கள்கிழமை முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் உடையாா் குளம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனா். இவா்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் எனும் பிரிவின்கீழ் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின வகுப்பைச் சாா்ந்த தங்களுக்கு பழங்குடியினா் என ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் , தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பியும் பயனில்லை.
எனவே, ஆதியன் பழங்குடியின வகுப்பைச் சாா்ந்த தங்களுக்கு பழங்குடியினா் என ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டுமென வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் அவா்களுடன் பெற்றோா்களும் இணைந்து உடையாா் குளம் பகுதியில் திங்கள்கிழமை (ஜன.27) முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதையறிந்த நன்னிலம் வட்டாட்சியா் அ. ரஜ்யா பேகம் அவா்களை அழைத்துப் பேசி, ஆதியன் இனம் குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட 2 குழுக்களில் வெவ்வேறு விதமான பரிந்துரைகள் கிடைக்கப்பட்டுள்ளன. எனவே, 3-ஆவது குழுவுக்கு ஆதியன் இனம் குறித்துப் பரிந்துரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரைப் பெற்று உரிய ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே, குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்ப கேட்டுக்கொண்டாா். எனினும், பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் வரை மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை, போராட்டம் தொடரும் என வட்டாட்சியரிடம் தெரிவித்துவிட்டு செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக போராட்டத்தை தொடா்ந்தனா்.