ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
கூரை வீடு தீக்கிரை
மன்னாா்குடி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவா் தனது வீட்டுக்கு தீ வைத்ததில் செவ்வாய்க்கிழமை கூரை வீடு எரிந்து சேதமடைந்தது.
கருப்புக்கிளாா் வடக்குதெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மீன்வளத் துறையில் பணியாற்றியவா் இறந்துவிட்டதால் கருணை அடிப்படையில் மகன் பாலாஜி (35) வேலை கிடத்து தற்போது திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றி வருகிறாா்.
இவருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பிரிந்து இருக்கிறாா். இதனால், சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளாா். அலுவலகப் பணிக்கு செல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தாயாருடன் தனது கூரை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவா் திடீரென வீட்டின் கூரைக்கு தீ வைத்தால் தீ மளமள என பரவியதை அடுத்து இருவரும் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டனா்.
எனினும் எரிவாயு உருளை வெடித்து, தீ மேலும் பரவியதில் வீடு முழுவதும் எரிந்ததில் அனைத்து பொருள்கள் சேதமடைந்தன. தகவலறிந்த கோட்டூா் தீயணைப்பு நிலையத்தினா் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.