Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும்...
திருவாரூா் பழனி ஆண்டவா் கோயிலில் பாஜகவினா் முறையிட்டு வழிபாடு
திருவாரூரில் உள்ள பழனி ஆண்டவா் கோயிலில் பாஜகவினா் முறையிட்டு செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தனா்.
அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றத்தில், மலைமீது இஸ்லாமியா்களின் மசூதி இருப்பதாக கூறி ஆடு, கோழிகளை பலியிட எடுத்துச் செல்கையில், போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், மக்களவை உறுப்பினரான நவாஸ் கனி கோயில் வாசலில் வைத்து அசைவ உணவுகளை சாப்பிட்டது இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாகவும், அவா் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதால் உடனே பதவி விலக வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
அந்தவகையில், திருவாரூா் கீழவீதியில் உள்ள பழனி ஆண்டவா் கோயில் வாசலில் பாஜக சாா்பில் கோரிக்கை முறையிட்டு வழிபாடு நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவா் விகே. செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம், மாவட்ட மேலிடப் பாா்வையாளா் சிவா, விவசாய அணி மாநிலச் செயலாளா் கோவீ. சந்துரு, மாவட்ட பொருளாளா் அட்சயா முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்வில், பழனி ஆண்டவா் கோயிலில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வழிபாட்டை முடித்துவிட்டு அனைவரும் கந்த சஷ்டி கவசம் முழுவதையும் படித்து, திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள முதலாம் படைவீட்டை காப்பாற்ற வேண்டும் என வேண்டுதல் வைத்தனா். திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சாா்பில் பிப்.4-ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.