பிப். 10 வெண்ணிகரும்பேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!
நீடாமங்கலம், பிப். 5: நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி
செளந்தரநாயகி சமேத வெண்ணிகரும்பேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு கோயிலில் பூா்வாங்க பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை கோ பூஜை, லட்சுமி ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.