செய்திகள் :

காஸா விவகாரத்தில் டிரம்பின் முடிவு ஆபத்தானது! காங்கிரஸ்

post image

காஸா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவு விசித்திரமானதாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் மோடி தலைமையிலான அரசு தனது நிலைபாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க : சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் கட்டணம்! திடுக்கிடும் தகவல்!

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருடன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப், காஸாவை அமெரிக்க ராணுவத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவுள்ளதாக அறிவித்தார்.

மேலும், போா்க்களத்திலிருந்து வெடிக்காத ஆபத்தான குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களையும், இடிந்த கட்டடங்களையும் அகற்றி, அப்பகுதியின் மறுகட்டமைப்புக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். அப்பகுதி மக்கள் அனைவருக்கும் குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும் ஒரு பொருளாதார வளா்ச்சி உருவாக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த முடிவை, அமெரிக்காவின் நட்பு நாடுகள் உள்பட பெரும்பாலான உலக நாடுகள், இரு தேசத் தீா்வுக்கு எதிரானது என்று நிராகரித்துள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

“காஸாவின் எதிர்காலம் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துகள் விசித்திரமானதாகவும் ஆபத்தானதாகவும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் உள்ளன.

மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட ஒரே தீர்வு, இஸ்ரேலுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் வாழ வேண்டும் என்ற பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பத்தை பூர்த்தி செய்வது மட்டுமே.

டிரம்பின் கருத்துக்கு மற்ற நாடுகள் தங்களின் நிலைபாட்டை தெரிவித்துள்ளன, மோடி அரசும் தெளிவான நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகுவதாக புதன்கிழமை அறிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டாலர் நிதியை ஆர்ஜென்டீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதா... மேலும் பார்க்க

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை

கிரீன்லாந்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. கிரீன்லாந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமெர... மேலும் பார்க்க

‘உக்ரைன் போரில் 45,100 வீரா்கள் உயிரிழப்பு’

ரஷியாவுடன் சுமாா் மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 45,100 வீரா்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். இது குறித்து யு-டியூப் ஊடகமொன்றுக்க... மேலும் பார்க்க

இந்தியாவுடன் பேச்சு நடத்தி இருதரப்பு பிரச்னைகளுக்கு தீா்வு - பாகிஸ்தான் பிரதமா் விருப்பம்

காஷ்மீா் பிரச்னை உள்பட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு பிரச்னைகளையும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்தாா். காஷ்மீா் மக்களுக்கு... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து ஹசீனாவை அழைத்து வருவோம்: வங்கதேச உள்துறை அமைச்சா் உறுதி

‘இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, அவரை விரைவில் தாயகம் அழைத்து வருவோம்’ என அந்நாட்டு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சா் ஜஹாங்கீா் ஆலம் ... மேலும் பார்க்க

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபா் டிரம்ப் உத்தரவு

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதற்கான அரசாணையை டிரம்ப் பிறப்பித்துள்ளாா். இதன் மூலம், அந்த அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது. இது குறி... மேலும் பார்க்க