செய்திகள் :

இந்தியர்கள் நாடு கடத்தல்: நாடாளுமன்றத்தில் அமளி! அவைகள் ஒத்திவைப்பு!

post image

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் நடவடிக்கையை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், முதல்கட்டமாக 104 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர். இந்த விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் தரையிறங்கியது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாத நிலையில், இந்தியர்களின் கை, கால்களை கட்டி அமெரிக்க ராணுவம் அழைத்து வந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தலைநகர் தில்லியில் அமெரிக்க விமானத்தை தரையிறக்காமல், பஞ்சாபில் தரையிறக்கப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க : சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் கட்டணம்! திடுக்கிடும் தகவல்!

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் முடங்கியது, பகல் 12 மணிக்கு அவைகள் மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

40 மணி நேரம் கை, கால்களில் விலங்கு; கழிப்பறைக்குக்கூட அனுமதி இல்லை; இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? - காங்கிரஸ்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். இதுக... மேலும் பார்க்க

இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்களில் விலங்கு போட்டிருந்த விடியோவை அமெரிக்காவே வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தியர்க... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு விலங்கு: மதியம் 2 மணிக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பிய நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு வெளியுறவுத... மேலும் பார்க்க

கை, கால்களில் விலங்கிட்டனர்: அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியர்கள் தகவல்

புது தில்லி: அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்த போது, கை மற்றும் கால்களில் விலங்கு போட்டிருந்தனர் என்று இந்தியர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய பலரும்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி: திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு!

யுஜிசியின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தில்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதி... மேலும் பார்க்க

பல்கலைக்கழகங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க சதி: அகிலேஷ் யாதவ்

பல்கலைக்கழகங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு சதி செய்வதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிம... மேலும் பார்க்க